Monday, August 31, 2009

ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் - ஐ.நா. அதிகாரி


ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் - ஐ.நா. அதிகாரி

UNஇலங்கைத் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்படுவதைக் காட்டும் விடியோ தொடர்பாக தன்னிச்சையான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என இலங்கை அரசை ஐ.நா. சிறப்பு விசாரணை அதிகாரி பிலிப் ஆல்சன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்றதொரு விசாரணை மூலமாக அரசு மீது தவறு இல்லை எனத் தெரியவந்தால், அரசின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்றும், இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசு உறுதியாக நம்பினால், விசாரணைக்கு உத்தரவிடாமல் தவிர்ப்பது எந்தவகையிலும் நியாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

 

அதே நேரத்தில், விடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையென நிரூபணமானால்,  அது சர்வதேசச் சட்டங்களை மீறியவையாகவே கருதப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கைக்குச் செல்வதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் தமக்கு இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை எனவும் ஆல்சன் குறிப்பிட்டார்.


 விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரிலேயே 'சேனல் 4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தப் படுகொலைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்தக்காலப் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசின் மீது போர்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கு இது ஒரு சிறந்த ஆதாரம் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

 

source:murasam
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails