Wednesday, August 5, 2009

முக்கிய போராளிகள் எவ்வாறு கொல்லப்படுகின்றனர்?

கைது செய்யப்பட்ட முக்கிய போராளிகள் எவ்வாறு கொல்லப்படுகின்றனர்? அவர்கள் நிலை என்ன?

கடந்த மே மாதம் 17,18,19 ம் திகதிகளில் சரணடைந்த மூத்த போராளிகள் மற்றும் போரளிகள் ஆகியோரை அரச படையினர், அரச புலனாய்வு துறையினர், மற்றும் பயங்கரவாத தடுப்பு பொலிசார் பல்வேறு இடங்களில் எந்தவிதமான தகவல்களோ அன்றி பதிவுகளோ இன்றி சிறையில் வைத்து சித்திரவதைகள் செய்யப்படுவதனை பலரும் அறிவர். இவ்வாறு கொழும்பு, பனாகொட, வெலிகந்த, அனுராதபுர போன்ற இரகசியமான இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

17 ம் திகதி மே மாதம் ஓமந்தை பகுதியிலும், முள்ளிவாய்க்கால் பகுதியிலும், பின்னர் 19, 21 ம் திகதிகளில் தடுப்பு முகாம்களில் வைத்தும் கைது செய்யப்பட்ட
மூத்த உறுப்பினர் திரு வே.பாலகுமாரன், அரசியல் துணை பொறுப்பாளர் திரு சோ.தங்கன், படைத்தளபதி லெப்.கேணல் வேலவன், லெப்.கேணல் லோரன்ஸ், திரு .யோகரட்னம் யோகி, திரு கரிகாலன்,திருமதி எழுமதி கரிகாலன், வைத்திய கலாநிதி சிவபாலன் மற்றும் பலர் அடங்கிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பனாகொட இராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டு சித்திர வதை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. இதனை பனாகொட இராணுவ முகாமிற்கு வழங்கல் செய்யும் பிரபல வழங்கல் நிறுவனத்தில் பணிபுரிந்த சிங்கள அதிகாரி மூலமாக அவரது முஸ்லிம் நண்பர் ஒருவருக்கு கடந்த மாதம் 16ம் திகதி கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவின் நாலாம் மாடியில் ஜோர்ச் மாஸ்ரெர், தயா மாஸ்ரெர், மனோஜ்,கரும்புலிகள் அணியினை சேர்ந்த மூன்று போராளிகள் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு முக்கிய அரசியல் துறை மற்றும் நிதி துறையினை சேர்ந்த போராளிகள் ஆகியோர் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. இங்குதான் புனர்வாழ்வு கழக உறுப்பினர்களும் மற்றும் நான்கு வைத்தியர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

பல போராளிகள் சித்திரவதை காயங்களுடன் பனாகொட இராணுவ முகாமில் எந்தவித மருத்துவ வசதிகளும் இன்றி போதிய உணவு,குடி நீர் வசதி இன்றியும் இருப்பதாகவும் இதன்மூலம் தொற்று ஏற்பட்டெ பல போராளிகள் இறப்பதாகவும் நம்பப்படுகின்றது. "காயங்களிற்கு போதிய சிகிச்சைகள் இன்றி விடப்பட்டுள்ளனர், காயங்களை மாற்றும் உயிர் காப்பு குளிசைகள் கொடுப்பதில்லை,அண்டி பையோடிக் மருந்துகள் குளிசைகள் கொடுப்பதில்லை. இதனால் காயங்கள் சீழ் பிடித்து அழுகிய நிலையில் கடும் காச்சல் வந்த நிலையில், ஆடைகள் இன்றி , முட்கம்பிகளால் நான்கு பக்கமும் சுற்றப்பட்ட கூண்டிற்குள் விடப்பட்டுள்ளதனை தான் கண்டதாக குறிப்பிட்ட அதிகாரி அந்த முஸ்லிம் நபரிடம் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் உள்ள போராளிகள் தடுப்பு முகாமிலும் இந்த நிலை தொடர்கின்றது. கடந்த கிழமை சில போராளிகள் சீழ் பிடித்த அழுகிய காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடியமுன்பே குற்ற புலனாய்வு பொலிசார் அழைத்து சென்றுள்ளனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails