தமிழக அரசின் அச்சுறுத்தலுக்குப் பணிந்தது தமிழக பத்திரிகைகள் ! தமிழ் ஈழம் தொடர்பான செய்திகளை தவிர்த்து வருகிறது. இலங்கையில் இன உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி தடை விதித்துள்ளது. அதை தமிழன் ஆட்சி செய்யும் தமிழகம் ஏற்று செயல்படுத்தி வருகிறது. சிங்கள அரசின் கொடுங்கோள் ஆட்சியில் தமிழர்கள் தங்கள் உரிமைகளை இழந்து, உடமைகளை இழந்து அகதிகளாய் தவித்து வருகின்றனர். அவர்களின் உரிமை மீட்கப்பட வேண்டும் என தமிழகத்தில் இருந்து, வை.கோ, பழ.நெடுமாறன், தா.பாண்டியன், ராமதாஸ் போன்ற தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட அமைப்பை பற்றி செய்தி விளம்பரம், பத்திரிகை தொலைகாட்சிகளில் வெளியிடுவதும் சட்டப்படி குற்றம், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அன்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பத்திரிகைகளை மிரட்டியுள்ளது. அதனால் திருமாவளவன் நடத்திய எழும் தமிழ் ஈழம் பற்றிய செய்தியையும், பெரியார் திராவிடர் இயகம் நடத்தி மாநாடு குறித்த செய்தியையும் தமிழக பத்திரிகைகள் புறகனித்துள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி கூறும் செய்திகளை மட்டும் பத்திரிகைகள் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment