| அரியானா மாநிலம் சிங்வால் கிராமத்தை சேர்ந்தவர் சோனியா. இவர் வேறு ஜாதியைச் சேர்ந்த வேத்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோனியாவை அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். | எனவே வேத்பால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு அவர், போலீஸ் உதவியுடன் மனைவியை அழைத்து செல்லலாம் என்று உத்தர விட்டது.
இதனால் வேத்பால் 15 போலீசாருடன் சென்று மனைவியை அழைத்து வர அந்தகிராமத்துக்கு போனார். அப்போது கிராமத்தினர் போலீஸ் முன்னிலையிலேயே வேத்பாலை அடித்து கொன்றனர். இந்த சம்பவம் கடந்த ஜூலை 23-ந்தேதி நடந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது ஊர்பஞ்சா யத்தார் சோனியாவுக்கு வேறு ஒருவருடன் கட்டாய திருமணம் செய்து வைத்து உள்ளனர். சோனியாவின் குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால் இதுபற்றி புகார் ஏதும் இல்லாததால் போலீசார் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை | .
|
No comments:
Post a Comment