Tuesday, August 25, 2009

புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களுடனான சந்திப்புக்கு இலங்கை எதிர்ப்பு

 
 
 
 
 
 
altதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
 
இந்தச் சந்திப்புத் தொடர்பாக வெஷிங்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியைத் தெரியப்படுத்தியுள்ளது.


புலம்பெயர்ந்துவாழும் தமிழர் எனக் கூறப்படுபவர்கள் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் மீது சட்டநடவடிக்கை எடுக்காது பார்த்துக்கொள்வதாக பிளேக் இந்தச் சந்திப்பில் உறுதிமொழி வழங்கியிருப்பதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த மாதம் 11ஆம் திகதி ரொபேர்ட்.ஓ.பிளேக்கும், இலங்கைக்கான அமெரிக்காவின் பதில் தூதுவர் ஜேம்ஸ் மூரும் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்தவாழும் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கை விடயம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தனர்.


ரொபேர்ட்.ஓ.பிளேக் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகச் செயற்பட்ட காலத்திலும், அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

 

 
source:murasam

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails