நெடியவன் தலைமையில் கொரில்லா போருக்கு தயாராகும் விடுதலைப்புலிகள்: வெளிநாடுகளில் பணம் திரட்டுகிறார்கள்
கொழும்பு, ஆக. 24-
விடுதலைப்புலிகள் புதிய தலைவர் பத்மநாதனை கைது செய்த இலங்கை ராணுவத்தினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் விடுதலைப்புலிகள் தொடர்பான பல்வேறு ரகசியங்களை கூறி வருகிறார்.
விடுதலைப்புலிகள் மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டுகளை வாங்க முயற்சித்தாகவும், அணுகுண்டு ரகசியங்களை தெரிந்து கொள்ள முயன்றதாகவும் கூறி இருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு இலங்கை அரசியல்வாதிகள் பலர் உதவியதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்மநாதன் கைதாகிவிட்டதால் அதற்கு அடுத்த கட்ட தலைவராக இருந்த நெடியவன் தற்போது விடுதலைப்புலிகள் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போது நார்வே நாட்டில் வசித்து வரும் அவர் அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருவதாக இலங்கை அரசுக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வெளிநாடுகளில் பணம் திரட்டும் பிரிவுக்கு நெடியவன்தான் தலைவராக இருந்தார். இப்போது அவர் மீண்டும் நிதி திரட்டும் பணியில் இறங்கி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்து உள்ளன.
விடுதலைப்புலிகள் ஆரம்ப காலத்தில் நடத்திய கொரில்லா போரை மீண்டும் தொடங்கும் திட்டத்துக்காக நிதி திரட்டுவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
எனவே எந்த நேரத்தில் விடுதலைப்புலிகள் கொரில்லா போரை தொடங்க கூடும் என்ற அச்சம் இலங்கையில் நிலவுகிறது.
விடுதலைப்புலிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இறுதிகட்ட போர் நடத்த மே மாதம் வரையிலும் ஏராளமான பணத்தை திரட்டி உள்ளனர். அதுவும் நெடியவனிடம் தான் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment