Thursday, August 6, 2009

இஸ்லாமிய ஆதார நூல்கள் புதிய மனிதர்களுக்கு பெண்கள் பாலூட்டலாம் என்றுச் சொல்கிறது

FrontPage: ஆக, இஸ்லாமிய ஆதார நூல்கள் புதிய மனிதர்களுக்கு பெண்கள் பாலூட்டலாம் என்றுச் சொல்கிறது. சரி, இப்படிப்பட்ட ஒரு விவரத்தை யார் சொல்லியிருப்பார்கள்? எந்த நோக்கத்திற்காக இப்படி சொல்லியிருப்பார்கள்? யாராவது சொன்னாலும் எழுதி வைத்தவர்கள் யார்? நான் இந்த விவரத்தை ஒரு சரியான போதனையாகவே ஏற்றுக்கொள்வதாகவும் வைத்துக்கொண்டாலும், இந்த கட்டளையின் பின்னால் என்ன நன்மை இருக்கப்போகிறது?

Botros: முஹமம்து (அல்லாஹ்வின் வேண்டுதலும், பாக்கியமும் அவர் மீது உண்டாவதாக) சொன்னார் என்று எழுதிவைத்திருக்கிறார்கள். யார் இப்படிப்பட்ட ஒரு விவரத்தை உருவாக்கியவர்? முஹம்மது தான். ஏன் உருவாக்கினார்? யாருக்குத் தெரியும் ஆண்களுக்கு பாலூட்டிவிடு என்று அந்த பெண்ணுக்குச் சொல்லிவிட்ட பிறகு முஹம்மது தனக்குள் தானே சிரித்துக் கொண்டும் இருக்கக்கூடும். ஒருவேளை அவர் இதை ஒரு நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கலாம், அதாவது தன்னை ஒரு நபி என்று எவ்வளவு தூரம் இவர்கள் நம்புகிறார்கள் என்பதை அறியவும், அவர் வேடிக்கைக்காக சொல்லியிருக்கலாம். ஹதீஸ்களை சேகரித்த பெரியவர்கள் இதனை எழுதியும் வைத்துள்ளனர், எதிர் கால சந்ததிகளுக்கு உதவும் என்பதால். இந்த ஹதீஸினால் என்ன பயன் என்று ஒருவர் கேட்கலாம், இப்படி கேட்பதாக இருந்தால், முஹம்மது செய்த அனேக காரியங்களைப் பற்றி கேட்கவேண்டிவரும்.

ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிப்பதால் என்ன பயன்?

ஆண்கள் தங்கத்தை அணியக்கூடாது, வெள்ளியை மட்டுமே அணியவேண்டும் என்ற கட்டளையினால் என்ன நனமை?

தங்கம் அணிவதை விட வெள்ளியை ஆண்கள் அணிவதினால் அதிக நன்மை எப்படி கிடைக்கும்?

"இசை" கூடாது என்றுச் சொல்வதினால் என்ன நன்மை உண்டாகப்போகிறது?

நாய்களை வெறுத்து தூரப்படுத்துவதினால் என்ன நன்மை உண்டாகும்?

மனிதர்கள் வெறும் தங்கள் வலது கையினால் மட்டும் சாப்பிடவேண்டும், இடது கையினால் சாப்பிடக்கூடாது என்ற கட்டளை எந்த நன்மையைத் தரப்போகிறது?

எல்லா இஸ்லாமியர்கள் தாங்கள் சாப்பிட்ட பிறகு தங்கள் விரல்களை நக்கவேண்டும் அல்லது வாயினால் உருஞ்சி சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையினால் என்ன நன்மை?

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், ஷரியா சட்டம் தான் நடுநிலையாக இருக்கவேண்டும், சர்வ அதிகாரமும் படைத்ததாக இருக்கவேண்டும் என்ற கட்டளைகளினால், இஸ்லாமியர்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்? இஸ்லாமியர்கள் இயந்திரங்களைப் போல இஸ்லாமை கேள்வி கேட்காமல் பின்பற்ற உற்சாகப்படுத்தப்படுகிறார்கள், குர்‍ஆனை கேள்வி கேட்கவிரும்புவதில்லை, "உங்களை பாதிக்கும் படியாக, கேள்விகளை கேட்கவேண்டாம்" என்று சொல்லப்படுகிறார்கள்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails