Thursday, August 20, 2009

இணைய தளக் குற்றங்கள் இந்தியாவில் அதிகரிப்பு: ஆய்வு தகவல்

 

சைஃபர் கிரைம் எனப்படும் இணைய தளங்கள் வாயிலான குற்றங்கள் அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா மிக வேகமாக உருவெடுத்து வருகிறது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திலுள்ள பிரிக்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

இணையதள குற்றமும் சட்டவிரோத நவீனமும் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகரித்து வரும் இணைய தளக் குற்றங்கள் கவலை கொள்ளத்தக்கவையாக உள்ளது என தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிலும் சமீப ஆண்டுகளாக இந்தியாவில் சைஃபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அதிலும் குறிப்பாக 'கால் சென்டர்கள் ' மூலமான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைஃபர் குற்றங்களில் ரஷ்யா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உலக தலைவர்களாக திகழ்கிற நிலையில், அவற்றுடன் போட்டி போடும் வகையில் இந்தியாவில் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கம்பெனிகள் இன்னும் தங்களது தகவல் தொழில்நுட்ப (ஐடி) செயல்பாடுகள் மற்றும் மென்பொருள் உருவாக்க பணிகளை, நல்ல திறமை மற்றும் குறைந்த கூலி போன்ற காரணங்களுக்காக,இந்தியா மற்றும் பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails