Wednesday, August 12, 2009

கே.பி கைதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது

 
 

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட முறை சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானதென அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளா ஸாம் சபாரி தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கத்திடம் குமரன் பத்மநாதனை மலேசியா ஒப்படைத்த விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கைது செய்யப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமையவே தண்டிக்கப்பட வேண்டும் எனவும், மாறாக இலங்கையிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், மலேசியாவில் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அந்த நாடு இதுவரையில் தெளிவான விளக்கம் எதனையும் முன்வைக்கவில்லை.
 
சித்திரவதை செய்யப்படக் கூடிய சாத்தியமுடைய சந்தர்ப்பத்தில் குற்றவாளிகள் என்ற போதிலும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குமரன் பத்மநாதன் எவ்வாறு இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்த சந்தேகம் பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails