எழில் என்பவர் தன் பதிவில் தீண்டாமை என்பது மனுசாஸ்திரத்தில் இல்லை.அது மொகளாய மன்னர்களும்,வெள்ளைக்காரர்களும் இந்தியாவுக்கு கொண்டு வந்தது என்று பிதற்றுகிறார்.அது உண்மையா மனு சாஸ்திரம் என்ன தான் சொல்கிரது.
பார்ப்பனர் மேலானவர் என்று மனுசாஸ்திரம் சொல்லுதே..என்னப்ப அடையாளம்?
"மனுசாஸ்திரமா? அதையெல்லாம் இந்தக் காலத்துல யாருண்ணா ஃபாலோ பண்றா?" என்பார்கள் இந்தக் கால பிராமணர்கள். ஆனால் உண்மையில் இவர்களின் பார்ப்பன தர்மத்தின் அடிப்படை மனுசாஸ்திரத்தில்தான் இருக்கிறது.
''மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31). என்கிறது மனுசாஸ்திரம்.
பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்ரியவர்களாம் பிராமணர்கள். இப்படி சொல்கிரது மனுசாஸ்திரம். ஏன் முகம்? மற்ற பகுதிகள் என்ன பாவம் பண்ணியது? முகத்தில் தோன்றிய பார்ப்பனர்களுக்கு என்ன சிறப்பு? அதற்கும் மனுசாச்திரமே பதில் சொல்கிறது.
''புருஷ தேகம் சுத்தமானது. இடைக்கு மேல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது (1 : 92).
மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் அந்தணன் சிறந்து விளங்குகின்றான். (1 : 93)
சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (1 : 94).
மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே ஜீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (1 : 99).
பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும், படைப்புலகில் காணப்படும் சகலத்தையும் தனது செல்வமாகக் கொள்ளத்தக்கவனாக அவன் விளங்குகின்றான் (1 : 100).
எனவே அவன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள் யாவும், அவனுடைமையை அவன் பெறுவதாகவும் ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்யவராயுமிருக்கிறார்கள் (1 : 101).
கடவுள் உண்மையிலேயே பார்ப்பனரை மேலானவர்களாக படைக்க நினைத்திருந்தால், அவர்களுக்கு மூன்று கண்களையோ, நான்கு கால்களையோ, அல்லது காவி கலர் ரத்தத்தையோ கொடுத்து ஒரு தனியான பிறவியாக படைத்திருக்கலாம்தானே? அப்படி இல்லாதப்போ, அவர்களும் மற்ற எல்லா மனிதர்களையும் போல படைக்கப் பட்டிருப்பதால், பார்ப்பனர்கள் மேலானவர்கள் என்று எப்படி நம்புவது? மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக இருக்குறப்போ, நான் மட்டும் மேலானவன் என்று சொல்கிறாயே, என்னப்பா அடையாளம்?
No comments:
Post a Comment