ஆசிரமம் நடத்தி நிர்வாணப் படம் தயாரித்த சாமியாரை காவல்துறையினர் தேடுதல் வேட்டை
நகரி, பிப். 8- கொள்ளை கும்பலிடம் நடத்திய விசாரணையில் அய்தராபாத்தில் ஆசிரமம் நடத்தி நிர்வாண பட சி.டி.க்கள் தயாரித்த சாமியாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்
ஆந்திர மாநில தலைநகர் அய்தராபாத்தில் உள்ள அருங்காட்சியத்தில் இருந்த நவாப் மன்னர்கள் கால கத்திகள் - கடந்த மாதம் திருட்டுப் போய் விட்டன.இந்த திருட்டு தொடர்பாக, அய்தராபாத் - சைதாபாத் காவல்துறையினர் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியபோது அந்த கொள்ளையர்களிடம் இருந்து ஆபாச நிர்வாண பட சி.டி.க்கள் மற்றும் ரூபாய் 4 லட்சம் ரொக்க பணம் ஆகியவை சிக்கின
இவற்றை அய்தராபாத்தில் உள்ள நித்தியானந்த சாமி ஆசிரமத்தில் இருந்து கொள்ளையடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். அந்த பணம் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்று அறிந்ததும் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த தகவலை அறிந்த சாமியார் ஆசிரமத்திலிருந்து தலைமறைவாகிவிட்டார். ஆசிரமத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாண சி.டி.க்கள் கைப்பட்டன.
மற்றும் வயாகரா மாத்திரையும், பாலியல் உணர்வுகளை தூண்டும் ஸ்பிரே போன்றவைகள் பெட்டி, பெட்டியாக சிக்கின.
சாமியார் நித்தியானந்த சாமியாரின் உண்மையான பெயர் திரிபுரானந்த சாமி, கோதாவரி மாவட்டம், நக்க வரபு மண்டலம் ஜங்காரெட்டி கிராமத்தை சேர்ந்தவர்.சாமியாரிடம் கொள்ளையடித்த பணம் அனைத்தும் கள்ள நோட்டுக் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல கோயில்களில் திருடுவது எப்படி என்பதை விளக்கும் வரை படங்களும் ஆசிரமத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அந்த சாமி யாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://viduthalai.com/20080208/news08.html
போதையில் புரளும் அர்ச்சகர்கள்சேலம் சுகனேஸ்வரர் கோயில் பிரச்சினை
சேலத்தில் உள்ள சுகனேஸ்வரர் கோயிலைப் பற்றி பல புகார்கள் வந்துள்ளன.
ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் அர்ச்சகர்கள்பற்றி சரமாரியாகப் புகார் கூறுகிறார்:
இங்கே உள்ள அர்ச்சகர்கள் போதை வஸ்த்துக்களை பயன்படுத்தியபடியே பூஜை பண்றாங்க. குறிப்பாக சங்கரன் என்கிற அர்ச்சகர், எல்லா நேரமும் பான்பராக் போட்டபடி தான் பூஜை பண்ணுவார்.
தியாகராஜன் என்கிற அர்ச்சகர் நில மோசடியில் ஈடுபட்டவர். கோயில் ஆளுங்க பயன் படுத்திக்கிறதுக்காக இருந்த... ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, கோயில் நிருவாகத்தின் உடந்தையோட அர்ச்சகர்கள் வித்திருக்காங்க.
இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கு.இந்தக் கோயிலில் மூன்று அர்ச்சகர்கள்தான் இருக்கனும். ஆனா, ஏகப்பட்ட அர்ச்சகர்கள் இருக்காங்க. இங்கே பழுதான கோயில் குடியிருப்புகள் பல இருக்க... வன்னிய திலகமோ, தான் குடியிருக்கும் பகுதிக்கு மட்டும் காம்பவுண்டு சுவர் கட்டியிருக்கார்.
பக்தர்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. யானைக்கு அங்கவஸ்திரம் கூட இல்லை. ஆனா... அவங்க மட்டும் செழிப்பாயிருக்காங்க.இந்த ராதாகிருஷ்ணன்பற்றியும், அர்ச்சகர்கள் புகார் கூறியுள்ளனர்.--நன்றி: நக்கீரன், 9.2.2008 ..>> http://viduthalai.com/20080208/news05.html
No comments:
Post a Comment