கடவுள் இல்லை,சொர்கம்,நரகம் இல்லை என்று சொல்பவர்கள் இன்று அதை பற்றிய ஒரு மிகப்பெரிய விவாதம் நடத்திவருகின்றனர்.
ஆனால் கடவுள் உண்டு,சொர்கம் நரகம் உண்டு என்று சொல்பவர்கள் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்வது இல்லை.எங்கள் நம்பிக்கையை யாரும் அசைக்கமுடியாது என்பதை போல்.
அதை பற்றிய ஒரு தொகுப்பு
ஒரு ஆத்திகரு,நாத்திகரு நண்பர்கள்,இரண்டு பேரும் பேசிக்கொள்ளுகிரார்கள்.
நாத்திகர்:டே ஏண்டா கடவுள்,சொர்கம், நரகம் இப்படி இல்லாத ஒன்ன புடிச்சு தொங்கரிங்க.
ஆத்திகர்: டேய் நண்பா அப்படி எல்லா சொல்லாதட கடவுள் உண்மையாகவே இருக்கார்டா,நம்மள சொர்கத்துக்கு அனுப்பரதுக்கும் ,நரகத்துக்கு அனுப்பறதுக்கும் அவருக்கு சக்து இருக்கு.நாம் செத்ததுக்கு அப்பறமா ஒரு மிக பெரிய வாழ்க்கை இருக்கு.
நாத்திகர்:என்ன செத்ததுக்கு அப்புறம் ஒரு வாழ்க்கையா?பூ.ஹா ஹா ஹா ஏண்டா இப்படி ஜோக் அடிக்கிறீங்க,முட்டாள் தனமா?
ஆத்திகர்:சரிடா நாண்பா நான் ஒன்னு கேக்கரேன்,பதில் சொல்லு
நாத்திகர்:சரி கேளு
ஆத்திகர்:நான் கடவுளை நம்புறேன்,சொர்கம்,நரகம் பற்றியும் நம்புறேன்.நீ இவைகளை நம்பவில்லை.நாம ரெண்டு பேருமே செத்து போகிறோம் வச்சுக்கோ,அங்கே நீ சொன்ன மாதிரியே கடவுளும் இல்லை,சொர்கம்,நரகம் இரண்டும் இல்லை என்று வைத்துக்கொள் அப்போ இந்த நம்பிக்கையில் வாழ்ந்த எனக்கோ,இந்த நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த உனக்கோ ஏதாவதும் பிரச்சனை இருக்கா?
நாத்திகர்:அப்பறம் என்ன பிறச்சனை நாம தான் செத்துடோம்மில்ல
ஆத்திகர்: சரி,இப்போ அடுத்த கேள்வியை கேக்கிறேன்.நாம ரெண்டு பேரும் செத்ததுக்கு அப்புறம் ஒரு வேளை நான் நம்பின மாதிரியே கடவுளும்,சொர்கமும்,நரகமும் இருந்துருச்சுன்னு வச்சுக்கோ அப்போ என் நம்பிக்கைக்கு பலன் கிடைக்கும்,ஆனால் அப்ப உன் நிலமை என்னவாகும்ன்னு யோசிச்சியோ?
நாத்திகர்:இது யோசிக்கவேண்டிய விசயம் ...???
No comments:
Post a Comment