Tuesday, April 1, 2008

பிறந்து 11 வாரங்களே ஆன குழந்தைக்கு, நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது

4 •øÓ ©õµøh¨¦: u¨¤¯x SÇ¢øu

 

 

 

லண்டன் :பிறந்து 11 வாரங்களே ஆன குழந்தைக்கு, நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு பின்பும், அந்த குழந்தை, நல்ல உடல் நலத்துடன் இருப்பது, டாக்டர்களுக்கே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனை சேர்ந்தவர் பிரயான், இவரது மனைவி அன்னா. இவர்களுக்கு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆலிவர் என பெயரிட்டு, செல்லமாக வளர்த்து வந்தனர். வழக்கமான பரிசோதனைக்கு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த டாக்டர்,"குழந்தையின், இதய துடிப்பு சரியாக இல்லை' என கூறினர். ஆனால், ஆலிவர் மற்ற குழந்தைகளை போல, நல்ல உடல் நலத்துடன் இருந்ததால், டாக்டரின் அறிவுரையை, பெற்றோர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பின், ஆலிவருக்கு பால் குடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து மயக்கமான நிலையிலேயே இருந்தான். உடனடியாக, குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். இதய துடிப்பை, வழக்கமான நிலைக்கு கொண்டுவர, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையில், ஆலிவருக்கு நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. இருந்தாலும், மற்ற குழந்தைகளைப் போல், நல்ல உடல் நலத்துடன் உள்ளான். சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், "பிறந்த 11 வாரங்களுக்குள், அவனுக்கு நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்டதை நம்பமுடியவில்லை' என்றனர்.
 

 
http://www.dinamalar.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails