சிங்கள ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல்
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வலு வான தரைப்படை கள், கடற்படைகள் உள்ளன. புதிதாக அவர்கள் விமானப் படையையும் ஏற் படுத்தி இருந்தனர்.
சிங்கள ராணுவத் துக்கு சிம்ம சொப்பன மாக இருக்கும் இந்த படை வன்னி காட்டுப் பகுதியில் இயங்கி வரு கிறது. அங்கு ரகசிய ஒரு தளமும் அமைத்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் விடுதலைப்புலிகள் விமானங்கள் சிங்கள ராணுவ முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தின.
இலங்கையில் வடக்கு பகுதியில் உள்ள பெலிஒயா என்ற இடத்தில் 2 இடங்களில் சிங்கள் ராணுவ முகாம் இருக் கிறது. விடுதலைப்புலிகளிள் 2 விமானங்கள் இங்கு பறந்து வந்து குண்டுகளை வீசின. மொத்தம் 3 குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் விமானங்கள் பத்திரமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டன.
ராணுவ தரப்பில் ஏற்பட்ட சேதம் பற்றி முழு மையான தகவல்கள் வெளி வரவில்லை. ராணுவ அதி காரி ஒருவர் கூறும் போது ஒரே ஒரு வீரர் மட்டும் காயம் அடைந்துள்ளார். பெரிய சேதம் இல்லை என்றார். விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இன்னும் தகவல்கள வரவில்லை.
விடுதலைப்புலிகள் விமானம் தாக்கிய போது ராணுவம் தரப்பில் எதிர் தாக்குதல் நடந்ததாப என்றும் தெரியவில்லை.
இந்த தாக்குதல் தொடங்கு வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு சிங்கள ராணுவ விமானங்கள் வன்னி பகுதி யில் விடுதலைப்புலிகள் முகாம் மீது குண்டுகளை வீசின. இதற்கு பதிலடியாக விடுதலைப்புலிகள் விமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
3 நாட்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவ முகாமை அதிரடியாக தாக்கி 150-க்கும் மேற்பட்ட சிங்கள வீரர்களை கொன்று குவித்தனர். அதைத் தொடர்ந்து விமானம் மூலமும் தாக்குதல் நடத்தி சிங்கள ராணுவத்துக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனு ராதாபுரத்தில் சிங்கள விமா னப்படை தளம் மீது முதல் விமான தாக்குதல் நடத்தினார்கள். 6 மாதத்துக்கு பிறகு இன்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.
விடுதலைப்புலிகளின் விமானப்படையை அழிக் கும் நோக்கத்துடன் சிங்கள விமானங்கள் அடிக்கடி வன்னி பகுதிக்கு சென்று தாக்கி வந்தன. ஓடு தளத்தை கடுமையாக சேதப்படுத்தி விட்டோம் இனி விடுதலைப் புலிகள் விமானப்படை செயல்படுவது கடினமா னவை என்றும் சிங்கள ராணுவம் கூறி வந்தது.
No comments:
Post a Comment