நந்திகிராமில் மீண்டும் பதட்டம்: மம்தா தோழி உள்பட 2 பெண்கள் கற்பழிப்பு
மிட்னாபூர், ஏப். 20-
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழிற்சாலை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி னார்கள். அவர்கள் மீது கம்ïனிஸ்டு தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் பயங் கர கலவரம் மூண்டது. அதன் பிறகு அமைதி ஏற்பட்டது.
இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக நந்திகிராமில் மீண்டும் மோதல் ஏற்பட்டது. உள்ளூரைச் சேர்ந்த நில காதுகாப்பு குழுவினர் மீது கம்ïனிஸ்டு தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் நில மீட்புகுழுவினர் காயம் அடைந்தனர். போலீ சார் விரைந்து சென்று அமைதி ஏற்படுத்தினர். காயம் அடைந்தவர்கள் ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தமோதலின் போது 2 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். அவர்களை திரி ணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீட்டு ஆஸ் பத்திரியில் சேர்ந்த்தனர்.
கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பெயர் ராதா கிருஷ்ண அரி. இவர் திரிணா முல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் தோழி ஆவார். இவரது வீட்டுக்கு வந்த மார்க்சிஸ்ட் தொண் டர்கள் அரியின் கணவரை அடித்து உதைத்து விரட்டி விட்டு அரியை கற்பழித்து விட்டு தப்பி ஓடி விட்டதாக திரினாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் புகார் கூறி உள்ளனர்.
ஆனால் இந்த சம்பவத்தை போலீஸ் ஐ.ஜி. கனோஜியா மறுத்துள்ளார். காயம் அடைந்த 2 பெண்கள் தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் கற் பழிப்பு வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment