Sunday, April 27, 2008

தற்கொலைப்படை தாக்குதல் ; ஆப்கானிஸ்தான் அதிபர் உயிர் தப்பினார்-3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தற்கொலைப்படை தாக்குதல் ; ஆப்கானிஸ்தான் அதிபர் உயிர் தப்பினார்-3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காபூல், ஏப். 27-

ஆப்கானிஸ்தான் தலை நகரம் காபூலில் இன்று காலை போர் வீரர்கள் விழா நடந்தது. இதில் அதிபர் அமீது ஹர்சாய் கலந்து கொண்டார்.

விழா தொடங்கும்போது அந்த நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் சிலர் அந்த கூட்டத்துக்குள் புகுந்து சர மாரியாக துப்பாக்கியால் சுட்டனர். வெடிகுண்டும் வெடித்தது.

உடனே ஹர்சாய் பாது காப்பு படையினர் அவர்கள் மீது எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அமீது ஹர்சாய்க்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர் பத்திரமாக வேறு இடத் துக்கு கொண்டு செல்லப்பட் டனர்.

விழாவில் பங்கேற்ற ஒருவர் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். 11 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு நாய்கள் தான் காரணம் தலிபான் தீவிரவாதிகள் அறிவித்து உள்ளனர். நாங் கள் 6 தற்கொலைப்படை தீவிரவாதிகளை ஹர்சாயை கொல்ல அனுப்பி வைத் தோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails