கழுதையும்,மனிதர்களும்
ஒரு
சிறிது
தூரம் சென்றதும் ரோட்டில் போயிக்கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் "என்ன கொடுமை இது சின்ன பையனை நடக்க வைத்து விட்டு இந்த கிழவன் சொகுசாக போகிறான் பாரு என்று திட்டிக்கொண்டே போனான்.உடனே
தகப்பன் கழுதையில் இருந்து இறங்கி தன் மகனை கழுதையில் ஏற்றினான்.சிறிது தூரம் போனவுடன் இன்னொருவன் சொன்னான் பாவம் கிழவனை நடக்கவிட்டு இந்த சின்ன பையன் பாரு சொகுசா போறான்.இரண்டு பேறும் ஏறிப்போக வேண்டியது தானே என்று சொல்லிக்கொண்டே சென்றான்.உடனே
அந்த தகப்பனும் மகனுடன் சேர்ந்து கழுதையில் ஏறிக்கொண்டார்.சிறிது தூரம் சென்ற உடன் இன்னொருவன் சொன்னான் படுபாவிகள் பாவம் அந்த வாயில்லா ஜீவனை எப்படி சித்ரவதை செய்கிறார்கள் என்று.
தகப்பனுக்கும்
,மகனுக்கும் இது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.உடனே கழுதையில் இருந்து இறங்கி இருவரும் நடந்தே வந்தனர்.சிறிது தூரம் சென்றவுடன் வேறு ஒருவன் வந்து சொன்னான் " காசு கொடுத்து கழுதையை வாங்கி அதில் ஏறிப்போகாமல் நடந்து செல்கிறார்கள் முட்டாள்கள் என்று.என்ன நண்பர்களே ஒன்னுமே புரியவில்லையா
?ஊருல போகிறவன் ,வருகிறவன் பேச்சை எல்லாம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.நாம எதை செய்தாலும் குறைதான் சொல்லுவார்கள்.ஆகவே மற்றவர்கள் சொல்லும் அனைத்தையும் நடைமுறைப்படுத்தக்கூடாது
No comments:
Post a Comment