சமீபகால முபாஹலா போன்ற நிகழ்வுகளுக்குப்பிறகு, சில சகோதரர்கள் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, P.J.மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை உரிய ஆதாரங்களோடு, சாட்சிகளோடு உங்களால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நாம் உறுதியாக அறிவிப்பது வருமாறு:
உண்மையை அறிய விரும்புகிறவர்கள் நேரில் வந்தால், P.J. படுபொய்யர், அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ்வின் மீதே ஆணையிட்டே அவருக்கு மிக வேண்டியவர்களே வேண்டாதவர்கள் ஆகும்போது அப்பட்டமான பொருளாதார சம்பந்தப்பட்ட அவதூறுகளை அள்ளி இறைப்பவர், பொய்யிலே பிறந்து பொய்யிலே வளம் பெறுபவர், பொய்களை நிலைநாட்ட அல்லாஹ்வின் அச்சமின்றி, குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக முபாஹலாவுக்கு அழைப்பு விடுபவர், இப்படி அவர்மீது நாம் கூறும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உரிய ஆதாரங்களுடன், சாட்சிகளுடன், அவர் கைப்பட எழுதிய கடித ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்.
அல்லது, சத்திய மார்க்கத்தை சமுதாய ஒற்றுமையை நிலைநாட்ட உண்மையிலேயே விரும்புகிறவர்கள், நல்லவர்கள், வல்லவர்கள் சேர்ந்து பக்க சார்பில்லாத நடுநிலையாளர்களைக் கொண்ட ஓர் "உண்மை அறியும் குழுவை" அமைத்து நீதிமன்றம் போல், தேதி, இடம் அவர்களே முடிவு செய்து, எனக்கும், P.J.க்கும், தங்களின் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கத் தேவையான அனைத்து ஆவணங்கள், சாட்சிகள் உட்பட ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பச்செய்யுங்கள்.
நாம் அந்த அழைப்பாணையை ஏற்று, குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் எம்மிடமிருக்கும் அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், பேசிப்பதிவாகி இருக்கும் டேப்புகள், மற்றும் ஆவணங்கள், சாட்சிகள் உட்பட ஆஜராகி எமது தரப்பு நியாயங்களை எடுத்து, அந்த "உண்மை அறிவும் குழு" முன்னால் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறோம் என்று இதன் மூலம் உறுதி அளிக்கிறோம்.
இதுபோல் P.J.யும் தம்மிடம் இருக்கும் கடிதம், டேப் பதிவுகள், ஆவணங்கள், சாட்சிகள் உட்பட ஆஜராகி தனது பக்க நியாயங்களை "உண்மை அறியும் குழு முன்னால் சமர்ப்பிக்க வேண்டும்.
அவர் பக்கம் நியாயம்-உண்மை-சத்தியம் இருப்பதாக அவர் உண்மையிலேயே மனப்பூர்வமாக நம்பினால், கண்டிப்பாக "உண்மை அறியும் குழு" முன்னால் ஆஜராகி தனது பக்க நியாயங்களை எடுத்து வைக்கத் தவறமாட்டார்.
தன்பக்கம் நியாயம் இல்லை, தனது வாதத் திறமை கொண்டும் பொய்யை உண்மை போல் நிலை நிறுத்த முடியாது என்ற அச்சம் அவருக்கு இருந்தால் மட்டுமே அவர் "உண்மை அறியும் குழு" முன்னால் ஆஜராவதைத் தவிர்க்க முடியும்.
அப்படி அழைப்பாணை அனுப்பியும் அவர் வரத்தவறினால், "எக்ஸ் பார்ட்டி" தீர்ப்பு என்பதுபோல் "உண்மை அறியும் குழு" நாம் சமர்ப்பிக்கும் அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், அவர் பேசி பதிவாகியுள்ள கேஸட்டுகள், மற்றும் ஆவணங்கள், சாட்சிகள் இவை அனைத்தையும் முறையாக கவனமாக பரிசீலனை செய்து, நாம் அவர்மீது கூறிவரும் குற்றச்சாட்டுகள் உண்மையா? பொய்யா? என அல்லாஹ்வுக்குப் பயந்து நடு நிலையோடு தீர்ப்பளிக்கட்டும்.
இந்த ஏற்பாடு குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற உறுதியோடு மத்ஹபுகளைவிட்டு விடுபட்டு வந்துள்ள சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒன்றுபட பெரிதும் உதவும் அது சமுதாயத்தில் கோணல் வழிகள் ஒழிந்து ஒரே நேர்வழி நிலைநாட்டப்பட வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தக் குற்றச் சாட்டுகளை உரிய ஆவணங்கள், சாட்சிகள் கொண்டே தீர்க்கமாக தீர்ப்பளித்துவிட முடியும்.
No comments:
Post a Comment