பார்ப்பனீயம் என்றாலே திரிபுவாதம்தான். பார்ப்பனீயம் என்ற பெயர் சொன்னாலே தமிழ்மக்கள் காறி உமிழ்ந்த காலமும் இங்கே இருந்தது. வேண்டுமானால் உமது முன்னோர்கள் யாராவது இருந்தால் கேட்டுப்பாருங்கள்.
சாதாரன மக்களுக்குள் வர்ண/சாதீய துவேஷத்தை விதைத்ததுதான் பாப்பனீயத்தின் முழுநேரவேலை. வேதம், மநு, கோயில் என்பதெல்லாம் அதனுடைய அடுத்தடுத்த யுக்திகளாக இந்த சாதிய படிநிலைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டவைதான். இப்படியிருக்க பாப்பானை அமெரிக்கன் வந்துதான் சூழ்ச்சி செய்து பிரித்துவைத்ததாக சரடுவிடுவது எல்லாம் உங்களை இங்கே மேலும் சந்திசிரிக்க வைத்துவிடும்.
வெள்ளையன் இங்கு வருவதற்கு முன் இருந்த மன்னராட்சிக்காலத்தில், ஒவ்வொரு மன்னனுக்கும் வலதுகரமாக இருந்த அம்பிகள் (அதான் உனது முப்பாட்டன்), வெள்ளையன் கைக்கு சிறிது சிறிதாக நாடு கைமாறிய போது வெள்ளையனுக்கும் 'மாமாவேலை' பார்த்து, வெள்ளையனையும் கைக்குள் போட்டுவைத்துக் கொண்டு தொடர்ந்து சாதிய துவேஷத்தை காப்பாற்றிவந்தது தான் பார்ப்பனியம்.
அதைவிடுத்து வெள்ளையன் பார்ப்பனியத்துக்கு எதிராக செயல்பட்டது போல நீங்கள் சொல்வது திரிபுதான். வெள்ளையன் உங்களுக்கு எதிராக செயபட்டிருந்தால் சாதிய படிநிலையில் உயர்ந்த இடத்தில் உங்களை பாதுகாப்போடு தக்கவைத்துக்கொண்டதற்கு பதிலாக உங்களை *** வேலையில் அல்லவா அவன் நிறுத்தியிருப்பான்.
வெள்ளையனைப் பயன்படுத்திக் கொண்டு தமது நிலையை மேலும் இறுக்கமாக கட்டமைத்துக் கொண்டு இப்போது நைசாக வெள்ளையன் மீது பழிபோடுவதை உமது அக்கிரகாரத்து அம்பிகளை வேண்டுமானால் ஏமாற்றலாம், எங்களிடம் உமது சரக்கு விலைபோகாது.
அம்பேத்கரும், பெரியாரும், ஜோதிபாபூலேவும் கொடுத்த மரண அடியிலே அரண்டு, போக்கெடம் இல்லாமல் பார்ப்பனியம் தஞ்சம் புகுந்த இடம் தான் இந்து மதம். "நாமெல்லாம் இந்து மதத்தவர்கள் இல்லை ஓய், பார்ப்பன மதம் தான் நமது மதம்" என்று சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இதே சென்னையில் நடைபெற்ற பார்ப்பன மாநாட்டில் தீர்மானமே போட்டு பேசினான் 'பாஷ்யம் அய்யங்கார்' என்பவன்.
சும்மா எப்பப்பாத்தாலும் முசுலீமைக் கேப்பியா?, கிறித்துவனைக் கேப்பியா?ன்னு வெத்து சவடால் அடிப்பது இன்று பார்ப்பனர்களைத் தவிர வேறுயாரும் அல்ல. முசுலீமைப் போய் நாங்க ஏன்டா கேக்கனும் அந்த மதத்திலிருப்பவன் தானே கேட்கனும். நாங்கள் இந்துவாக பிறந்து தொலைத்ததால்தான் இதையெல்லாம் கேட்கவேண்டியிருக்கிறது.
இனிமேலும் இந்த பஜனையெல்லாம் தவிர்த்து விவாதத்தை நடத்துவது உமக்கு நல்லது.
No comments:
Post a Comment