குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?
இம்தாஜ் அலிகான், சேலம் -1.
தெளிவு : "உமது மர்ம உறுப்புகளை, உன் மனைவியிடமும், உன் அடிமை பெண்ணிடமும் தவிர மற்றவர்களிடம் பாதுகாத்துக்கொள்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, "ஒரு மனிதன் தனிமையில் இருக்கிறான்; (அப்போதுமா மறைக்க வேண்டும்?) என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "மனிதர்களுக்கு வெட்கப்படுவதை விட அல்லாஹ் அதிகம் வெட்கப்படத் தகுதியானவன்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பஹ்ல், இப்னு ஹகீம் (ரழி) நூல்கள் : அபூதாவூது, திர்மித
இந்த ஹதீஸின் அடிப்படையில், நிர்வாணமாக குளிக்கக் கூடாது. அல்லாஹ்வின் திருத்தூதர் அனுமதித்த மனைவியிடம் தவிர மற்ற இடங்களில் நாம் அல்லாஹ்வுக்கு அதிகம் வெட்கப்பட கடமைப்பட்டுள்ளோம்.
No comments:
Post a Comment