Saturday, April 26, 2008

கடலில் கொட்டிய பாமாயில்

கடலில் கொட்டிய பாமாயில்

 
 
 

      டகாங்கா: தென்அமெரிக்க கண்டத்தின் வடமேற்குப் பகுதி நாடான கொலம்பியாவின் டகாங்கா கடற்கரை இது. இங்குள்ள மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்குள் தள்ள இவ்வளவு நாள் பட்ட சிரமத்தைவிட பலமடங்கு அதிகமாக இப்போது சிரமப்படுகின்றனர்.

காரணம், கடலோரத்தில் உள்ள நிறுவனத்தில் இருந்து வெளியேறி கடலில் கலந்த 10 டன் பாமாயில் எண்ணெய். மீன் பிடித்து வந்த மீனவர்கள் இப்போது இந்த பாமாயிலை சேகரித்து கொள்ளை லாபம் பார்க்கிறார்களாம்.

சிந்தியது தாவர எண்ணெய் என்பதால் உயிரினங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஆபத்தில்லை என்கிறார்கள் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails