Wednesday, April 16, 2008

டெலிபோன் ஒட்டு கேட்பு பிரச்சினை

டெலிபோன் ஒட்டு கேட்பு பிரச்சினை; அ.தி.மு.க. வெளிநடப்பு



சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. கொறடா செங் கோட்டையன் எழுந்து நேற்று ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இன்றும் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்து இருக்கிறோம். அதுபற்றி பேச அனு மதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் இந்த பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நேற்று பதில் அளித்து விட்டார். விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அப்போது அ.தி.மு.க.வினர் ஆதாரம் இருக்கிறது என்று குரல் கொடுத்தனர்.

உடனே சபாநாயகர் ஆதாரம் இருந்தால் விசா ரணை கமிஷனிடம் கொடுங்கள் என்றார்.

இதையடுத்து வெளிநடப்பு செய்வதாக செங்கோட்டையன் கூறினார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையை விட்டு வெளியே வந்த பிறகு செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவது பற்றி நேற்று ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந் தோம். ஆனால் அதற்கு அனு மதி மறுத்து வெளியேற்றி விட்டார்கள்.

இன்று முதல்-அமைச்சரின் உதவியாளர் ஒரு அதி காரியுடன் பேசிய டெல்லி போன் பேச்சு தொடர்பாக ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர கேட்டோம்.

இந்த செய்தி தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் வெளிவந்து இருக்கிறது. சி.டி. ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால் எங்களை பேச அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து இருக்கி றோம் என்றார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails