Friday, April 18, 2008

கத்தோலிக்க பள்ளிகளில் கிறிஸ்தவ விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்; போப் ஆண்டவர் வற்புறுத்தல்

கத்தோலிக்க பள்ளிகளில் கிறிஸ்தவ விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்; போப் ஆண்டவர் வற்புறுத்தல்

வாஷிங்டன், ஏப். 18-

போப் ஆண்டவர் பெனடிக் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரு கிறார். வாஷிங்டனில் அவர் கத்தோலிக்க பல்கலைக்கழ கத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதா வது:-

ரோமன் கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் கிறிஸ்தவ விதி முறைகளை மறந்து விட்டன. சுதந்திரமான கல்வி என்ற பெயரில் மாணவர்களை குழப்பம் அடைய செய்யக் கூடாது.

வகுப்பறையின் உள்ளே யும் வெளியேயும் கல்வி நிலையங்கள் ஒரே மாதிரி யான பார்வையுடன் செயல் பட வேண்டும். சுதந்திர மான கல்வியை நான் ஆதரிக் கிறேன். அதே சமயம் கிறிஸ் தவ விதிமுறைகளை பின் பற்ற வேண்டும். ஏனெனில் கிறிஸ்தவ விதிமுறைகள் நல்வழிக்கு மக்களை அழைத் துச்செல்வதாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமெரிக்க கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றும் 400 பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails