கராச்சி, ஏப். 26: பாகிஸ்தானில் இந்துக்கள் வாழ்வது கடினம் என்று சகஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட இந்து இளைஞரின் சகோதரி கூறியுள்ளார்.
கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் குமார் (22). அங்குள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அவர், சில நாள்களுக்கு முன் சக ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
முஸ்லிம் மதத்துக்கு ஏதிராக ஜெகதீஷ் குமார் பேசியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த சகஊழியர்கள் அவரை அடித்துக் கொன்று விட்டதாகவும் போலீஸôர் கூறுகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
"பாகிஸ்தானில் இந்துக்கள் வாழ்க்கை நடத்துவது கடினம்' என்று கொலையான ஜெகதீஷ் குமாரின் சகோதரி ராமேஸ்வரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"எனது சகோதரருக்கு முஸ்லிம் மதத்தைப் பற்றி துளி அளவுகூட தெரியாது. அவர், அந்த மதம் குறித்து சகஊழியர்களோடு எப்படி வாக்குவாதம் செய்திருக்க முடியும்.
முஸ்லிம் மதம் பற்றி அவதூறாக பேசியதால்தான் அவரை சகஊழியர்கள் அடித்துக் கொன்று விட்டதாக கூறுகிறார்கள். இதை எங்கள் குடும்பத்தினர் நம்பத் தயாராக இல்லை. கொலைக்கான உண்மையான காரணம் வேறு.
எனது சகோதரரின் மரணத்துக்கு நாங்கள் நஷ்டஈடு கோரவில்லை. அரசிடமிருந்து எந்த நிதியுதவியையும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எதிர்பார்ப்பது நீதி, நியாயத்தை மட்டுமே' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment