Tuesday, April 29, 2008

இந்திய மூளைக்கு என்ன விலை?

 

இந்திய மூளைக்கு என்ன விலை?


வெளிநாடு ஒன்றில் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதில் மூளைக்கு என்று ஒரு தனி பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.அந்த பகுதியில் எல்லா நாட்டு மூளைகளும் ஒவ்வொரு பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டு அதின் மேல் ஒரு வெள்ளை நிற காகிதத்தில் அதன் விலைகள் எழுதப்பட்டு இருந்தது.


ஒரு சுற்றுலா பயனிகள் ஒரு கூட்டமாக சென்று அந்த கண்காட்சியின் நடத்துனர்களிடம் மிகவும் கோபமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.என்ன விஷயம் என்று கேட்டார் அந்த கண்காட்சியின் மேளாலர்.அவர் உடனே அந்த மூளைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த பாட்டில்களை காண்பித்தார்கள்.



அதில் ஜப்பான்-500 டாலர்,இத்தாலி-1000 டாலர்,ஜெர்மன்-1500 டாலர்,அமேரிக்கா-2000 டாலர்,இப்படி பல மூளைகளுக்கு விலை எழுதப்பட்டு இருந்தது கடைசியாக இந்தியா-10,000 டாலர் எழுதப்பட்டு இருந்தது.



அந்த பயணிகள் மிகவும் கோபமாக எங்கள் நாடு எவ்வளவோ கண்டுபிடிப்புகளை உலக்குக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.ஆனால் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எங்கள் நாடுகளை சேர்ந்த மூளைகளுக்கு குறைந்த விலையை நிர்ணயித்து உள்ளீர்கள் என்று கூச்சலிட்டனர்.


உடனே அந்த மேளாலர் சொன்னார் நான் மிகவும் சரியாகத்தான் விலை நிர்ணயம் செய்து இருக்கிறேன்.எப்படி என்று உங்களுக்கு சந்தேகமானால் நான் விளக்கம் சொல்லுகிறேன்.


முதலாவது ஜப்பானை எடுத்துக்கொள்ளுவோம்.இது உலகத்தில் அநேக எலக்ட்ரானிக் பொருட்களை அறிமுகப்படுத்தி தன்னுடைய மூளையை முழுவதுமாக உபயோகித்து உள்ளது எனவே தான் இந்த ஜப்பான் மூளைக்கு 500 டாலர் விலை.


அடுத்து இத்தாலி இதுவும் தன் கண்டு பிடிப்புகளை உலகில் அதிகமாக பரவ விட்டுள்ளது.தன் மூளையில் 90% உபயோகித்து உள்ளது.எனவேதான் இதற்கு 1000 டாலர் விலை.


அடுத்தது ஜெர்மன் இது இஞ்னியரிங் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிகமாக தன் மூளையை 75% உபயோகித்து உள்ளது.எனவே இதற்கு 1500 டாலர்
அப்புறம் அமேரிக்கா இது இராணுவ தளவாடங்கள்,விண்வெளி ஆராய்ச்சி என்று தன் மூளையை 50% செலவு செய்து விட்டது.மீதம் 50% மிச்சம் உள்ளது எனவே விலை 2000 டாலர்


ஆனால் இந்தியாவை பொருத்தவரை மூளை புத்தம் புதியதாக வைத்துள்ளது.நீங்களே சொல்லுங்கள் உபயோகம் குறைவாக உள்ள பொருளுக்கு விலை எப்பொழுதும் அதிகம் தானே.பார்வையாளர்கள் எல்லோரும் அமைதியாக கலைந்து போனார்கள்.


No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails