Tuesday, April 22, 2008

காடு காக்க போராட்டம்

 

    லண்டன்: இந்தோனேசியாவின் அடர்ந்த காடுகள், தரிசு நிலங்களில் பாமாயில் தரும் எண்ணெய்ப் பனை மரங்கள் வளர்ப்பை விரிவுபடுத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது.

உலக அளவில் உணவுக்காக பாமாயில் தேவை அதிகரிப்பால் இது அவசியமாகிறது. ஆனால், பனை மரங்களுக்காக அடர்ந்த காடுகளை அழித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சர்வதேச அமைப்பான கிரீன்பீஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அந்த அமைப்பின் ஒரு உறுப்பினர், லண்டனில் முன்னணி உணவுப் பொருள் விற்பனை நிறுவனமான யுனிலீவர் அலுவலகம் முன் உராங் &உடான் வேடமிட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails