ஈராக் அரசுக்கு எதிராக மத தலைவர்கள் போர் அறிவிப்பு
பாக்தாத், ஏப். 20-
ஈராக்கில் அமெரிக்கா பொம்மை அரசை ஏற் படுத்தி உள்ள போதிலும் அங்கு சிறிதளவு கூட அமைதி ஏற்படவில்லை. தினமும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர் கதை யாக உள்ளன.
இந்த நிலையில் அங்குள்ள ஷியா மத தலைவர்கள் ஈராக் அரசுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக அறிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஷியா மத தலைவர் மக்தஷா சதார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈராக்கில் அரசு அமை தியை ஏற்படுத்தும் என்று கருதியதால் நாங்கள் இது வரை அனுமதியை கடைப் பிடித்தோம்.
ஆனால் எங்கு பார்த் தாலும் தொடர்ந்து வன்முறை நடக்கிறது. தீவிரவாதிகளை அமெரிக்க, இங்கிலாந்து படையாலோ, அரசாலோ கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் ஏராளமானோர் ஊடுருவி தாக்குதல் நடத்து கிறார்கள். அவர்களை அர சால் கட்டுப்படுத்த முடி யும் என்ற நம்பிக்கையும் இல்லை.
அதே நேரத்தில் அரசு எங்கள் அமைப் புக்கு எதி ராகவும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.
எனவே ஈராக் அரசுக்கு எதிராக நாங்களும் போரில் குதிப்போம். ஈராக்கை பயங் கரவாதிகள் பிடியில் இருந்து மீட்டு மக்களை சுதந்திரமாக வாழ வைப்போம்.
No comments:
Post a Comment