Saturday, April 26, 2008

பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா

ஹர்பஜன்சிங்குக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்

மொகாலி, ஏப். 26-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யுவராஜ்சிங்கின் பஞ்சாப் அணி 66 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. பஞ்சாப் பெற்ற முதல் வெற்றியாகும். அதே நேரத்தில் மும்பை அணி தொடர்ந்து 3-வது தோல்வியை சந்தித்தது.

வெற்றியை பஞ்சாப் அணி வீரர்கள் கொண்டாடி னார்கள். அப்போது அந்த அணி வீரர் ஸ்ரீசந்த் மட் டும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது டெலிவிஷ னில் தெரிந்தது. அவர் எதற்காக அழுதார் என்பது புரியவில்லை. அவரை மும்பை இந்தியன்ஸ் அணி யின் தற்காலிக கேப்டன் ஹர்பஜன்சிங் கன்னத் தில் அறைந்துள்ளார். இதற் காகத் தான் ஸ்ரீசந்த் அழுதார் என்பது பின்னர் தெரிந்தது. அவரை பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் வீரர்கள் ஆறு தல்படுத்தினர்.

ஹர்பஜன்சிங்கை பார்த்து அதிர்ஷ்டம் இல்லை என்று ஸ்ரீசந்த் கூறி அவரை வெறுப் பேற்றி உள்ளதாக தெரிகி றது. இது தொடர்பாக இரு வருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹர்பஜன்சிங்கின் இந்த செயலை பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ், பயிற்சியாளர் டாம்மோடி ஆகியோர் கண்டித்து உள்ளனர். இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மோடி கூறியுள்ளார். யுவராஜ்சிங் கூறும்போது, இது ஒரு மோசமான நிகழ்ச்சி. இது எனக்கு அதிர்ச்சியை ஏற் படுத்தியது. ஹர்பஜன்சிங் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது என் றார்.

இதற்கிடையே தனது செயலுக்கு வருத்தம் தெரி வித்து ஸ்ரீசந்திடம் நேரடியாக சென்று ஹர்பஜன்சிங் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர் பாக புகார் எதுவும் தெரி விக்க விரும்பவில்லை என்று ஸ்ரீசந்த் தெரிவித்தார். ஹர்பஜன்சிங் கூறும்போது, `எங்கள் குடும்பத்துக்குள் நடந்த சிறு நிகழ்வு. எங்க ளுக்குள் பிரச்சினை முடிந்து விட்டது. இதற்குமேல் சொல் வதற்கு ஒன்றும் இல்லை' என்றார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஹர்பஜன்சிங்குக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒடுக்கமின்மை மற்றும் வீரர்களுக்கான நடத்தை விதியை மீறியது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. 28-ந் தேதிக்குள் இதற்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அவருக்கு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹர்பஜன்சிங்குக்கு சில போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன்சிங்கும், ஸ்ரீசந்தும் உண்மையிலேயே நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails