Monday, April 14, 2008

தமிழ் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி முகாம்.


தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்குதகவல் கிடைத்துள்ளது.

கோவையில் ஆரூண் பாஷா, மாலிக் பாஷா, ரவி என்கிற திப்பு சுல்தான், போலோசங்கர் என்கிற அத்தக் கூர் ரகுமான், சம்சுதீன் ஆகிய 5 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் 8 இடங்களில் வெடிகுண்டுவைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கைதான 5போரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டுகளுடன் கைதானவர்களிடம் இருந்து சில இந்து மத தலைவர்களின் வீட்டுமுகவரி, போட்டோ, அவர்கள் வந்து செல்லும் பாதைகளின் வரைபடங்கள்,கோவையில் குண்டு வைக்க தேர்வு செய்த இடங்கள் அனைத்தும் இடம் பெற்றுஇருந்த சிடிகள், டெலிபோன் எண் அடங்கிய டைரி, வெடி மருந்துகள், பைப்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தீவிரவாதிகள் பல்வோறு குழுக்களாக பிரிந்துகோவை, சேலம், ஈரோடு நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஊடுருவி இருப்பதாகத்தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் கேரளாவில் ஆயுத பயற்சி பெற்றவர்கள்என்றும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள்கொடுத்த தகவலையடுத்து கோவையில் மேலும் 4 தீவிரவாதிகளை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு, சேலம்போன்ற பகுதிகளுக்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. எனவேஇப்பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய நகரங்களையும் தீவிரவாதிகள் தகர்க்க சதிசெய்து உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, மதுரைஉள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கைதான தீவிரவாதிகளுக்கு மனித நீதி பாசறை சார்பில் பயிற்சியளிக்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் தலைவர் மறுத்து விட்டார். நாங்கள் மதகல்வி பயிற்சி மட்டுமே அளிக்கிறோம் என்றார்.

ஆனாலும் தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதாகபோலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து ரயில்களுக்கும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின்உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.மேலும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை போலீஸ் காவலில்எடுத்து விசாரிக்க போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று வருகிறது. இவர்களிடம் நடத்தப்படும்விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார்தெரிவித்துள்ளனர்.

மேலும் 2 இமாம் அலி கூட்டாளிகள் கைது:

மேலும் 2 இமாம் அலியின் கூட்டாளிகளை மதுரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளியான சுல்தான் முகம்மது மதுரையில் 2 நாட்களுக்கு முன் வெடிகுண்டுகளுடன் கைதுசெய்யப்பட்டார். இமாம் அலியை போலீஸாரிடம் காட்டிக் கொடுத்த இப்ராகிம் என்பவரைக் கொலை செய்வதற்காக அவர் வந்தபோது பிடிபட்டார்.

இந்த நிலையில் இன்று மேலும் 2 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இப்ராகிம். அவரும், சுல்தானைகொல்வதற்காக திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மூலம் மதுரையில் பெரிய அசம்பாவிதத்தை போலீஸார் தடுத்துள்ளனர்.

இப்ராகிம் வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். இருவரையும் மதுரை 2வது குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails