விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கருத முடியாது – கெஹலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்று வந்த இராணுவ ரீதியான போர்முடிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் எனக் குறிப்பிட முடியாது என பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலியரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், எதிர்காலத்தில் ஆயுதங்களை ஏந்தமுடியாத வகையில் கடுயைமான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்உறுதியளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய நேர் காணலின் போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். பத்மநாதன்,காட்டில் வாழும் திருடனைப் போல எங்கோ இருந்து கொண்டு செயற்படுகின்றார். சூசைஒருசமயத்தில் குறிப்பிட்டார் உண்மையான யுத்தம் தரையில் அல்ல கடலிலேயேஇருப்பதாக. எனினும், அவை அனைத்தையும் தற்போது வெற்றிகொள்ளப்பட்டுள்ளதுஎன அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளையர்களும் செயற்பட்டார்கள். உலகில் எந்தவொருஅமைப்பிற்கும் இல்லாத பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். அவர்கள் விமானம் வைத்திருந்தார்கள்.எனினும், அந்த பலத்தை இலங்கை படைவீராகள் முறியடித்து விட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் சொற்பளவிலேயே காணப்படுவதாக அவர்தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்தாலும் அதன் மாயை இன்னமும் முடியவில்லை எனவும் தற்போது கரையோரப் பாதுகாப்புஅண்மையில் பலப்படுத்தப்பட்டது மிக முக்கியமான விடயம் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் கிழக்கில் கொரில்லாத் தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல்வெளியிட்டுள்ள நிலையில் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இந்தத் தகவல்களை
No comments:
Post a Comment