Friday, July 31, 2009

இலங்கை முகாம்களில் 20 ஆயிரம் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இருக்கிறார்களாம்!

 
 
இலங்கை முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததையடுத்து அங்கு வசித்த 2 1/2 லட்சம் தமிழர்கள் மீட்கப்பட்டு இலங்கை அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் போல் வசிக்கிறார்கள்.
 
முகாம்களில் தங்கியிருப்பவர்களில் 20 ஆயிரம் பேர் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்று இலங்கை ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெயரத்னாயகே தெரிவித்துள்ளார்.
 
அவர் மேலும், போரில் பாதிக்கப்பட்ட மக்கள் வன்னிப்பகுதியில் பல்வேறு முகாம்களில் வசிக்கிறார்கள். பொது மக்களுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் தங்கியுள்ளனர்.


15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இருக்கலாம். அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள். வவுனியா முகாமில் மட்டும் 10 ஆயிரம் பேர் உள்ளனர். பெண் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் உள்ளனர்.
 
முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழர்களில் பெரும் பாலானோர் விவசாய தொழிலாளர்கள். அவர்கள் மீண்டும் வயலுக்கு திரும்ப விரும்புகிறார்கள்.
 
மற்றவர்களை அவர்களுக்கு ஏற்ற தொழில் செய்ய ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொருவரும் என்ன விரும்புகிறார்கள் என்று கேட்டு வருகிறோம்.
 
விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails