Wednesday, July 8, 2009

ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்த பிச்சைக்காரர்

லட்சாதிபதி : பிச்சைக்காரர்      
 
திருவனந்தபுரம், எர்ணாகுளம் அருகே பள்ளிவாலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது.
எர்ணாகுளம் அருகே மாவூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார்.  இந்த பள்ளி வாசல் அருகே உள்ள குற்றிக்காட்டூர் ஜூம்மா பள்ளி வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.  காலில் புண்கள் இருந்ததால் பிச்சைக்கார முதியவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வந்தார்.  இந்நிலையில் பள்ளிவாசலுக்கு வந்தவர்களிடம் பிச்சைக்கார முதியவர் தனது பெயர் அப்துல் அலி என்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்றும் கூறியுள்ளார்.  பெரும்பாவூரில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்ல ஆசையாக உள்ளது.  அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லையென்றும் கூறியுள்ளார்.  இதை கேட்டசிலர் அந்த பகுதியில் வசூல் செய்து ரூ.10 ஆயிரத்தை அப்துல் அலியிடம் கொடுத்தனர்.  பெரும்பாவூர் பள்ளிவாசல் செல்வதற்கு ஒரு ஜீப்பையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.  அந்த ஜீப்பில் பெரும்பாவூர் சென்ற அப்துல அலி அங்கு டிரைவரை காத்திருக்குமாறு கூறிவிட்டு ஒரு மணிநேரம் கழித்து திரும்பி வந்துள்ளார்.  பின்னர் அதே ஜீப்பில் குற்றிக்காட்டூர் பள்ளிவாசலுக்கு வந்து வழக்கம் போல் பிச்சை எடுக்க தொடங்கினார்.  இதனை பார்த்த பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இதையடுத்து அவர்கள் முகமது அலியின் பையை சோதிததனர்.  அப்போது அதில் ரூ.80 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது.  மேலும் தபால் அலவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகமும் இருந்தது.  இதுகுறித்து அவர்கள் முகமது அலியிடம் கேட்டபோது, அவ்வளவு பணத்தையும் பிச்சை எடுத்தே சம்பாதித்தாக தெரிவித்தார்.  இதையடுத்து மாவூர் போலீசுக்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் தகவல் கொடுத்தனர்.  அவர்கள் விரைந்து வந்து முகமது அலியை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails