இலங்கையில் அரசியல் - பொருண்மிய ஆதிக்கம் செலுத்த சீனா பகீரதப் பிரயத்தனம்மேற்கொண்டு வருவதாக, ஆசிய நாடுகளின் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீனா பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளுகின்ற போதிலும், இந்தியாவின் செயற்பாடுகள்காரணமாக அவை மிக சாதுரியமாக முறியடிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் புனரமைத்துவரும் சீனா. 5.7மில்லியன் செலவில் பாணந்துறை துறைமுகத்தையும் புனரமைக்க முன்வந்துள்ளது.
இவை மட்டுமன்றி புத்தளம் நுரைச்சோலை அனல் மின்னிலையத்தை 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிச்செலவில் சீனா அமைத்து வருகின்றது. இதன் 2ஆம், 3ஆம் கட்டுமானப் பணிகளுக்கு மேலும் 400 மில்லியனைசெலவிடவும் சீனா தயாராக இருக்கின்றது.
கொழும்பு – கட்டுநாயக்க வீதியை 248.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலிவில் சீனா புனரமைப்பு வருவதுடன், 10மில்லியன் பெறுமதியான மேலும பல சிறிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், சிறீலங்காவிற்கு 38.5 மில்லியன் பெறுமதியான தொடரூந்து இயந்திரங்களையும், 27 மில்லியன்பெறுமதியான தொடரூந்துப் பெட்டிகளையும் சீனா வழங்கவுள்ளது.
சீனா கட்டிக்கொடுத்த பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தை 7.2 மில்லியன் செலவில் புனரமைக்கஒப்புக்கொண்டுள்ள சீனா, 45 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நீதிமன்றக் கட்டிடத்தை அமைக்கவும்முன்வந்துள்ளது.
இவை மட்டுமன்றி வீட்டுத் திட்டத்திற்கு 22 மில்லியனும், மின்சாரத் திட்டத்திற்கு 45 மில்லயனும் ஒதுக்கியுள்ளசீனா, இலங்கையில் முதலீடு செய்யும் நாடுகளின் வரிசையில் யப்பானிற்கு அடுத்தபடியாக இரண்டாவதுஇடத்திற்கு வந்துள்ளது.
இவ்வாறான பல திட்டங்களை முன்னெடுத்து, சிறீலங்கா அரசக்கு நிதியுதவியை வழங்கி, இலங்கையில் ஆதிக்கம்செலுத்த பௌத்த நாடான சீனா முயற்சி செய்கின்ற போதிலும், இந்தியா அதற்கு இணையாக பல திட்டங்களைமுன்வைத்து காய்நகர்த்தி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Thursday, July 16, 2009
காலூன்ற துடிக்கும் சீனாவும் - இந்தியாவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment