படைகளைவிட்டு 65,000 பேர் தப்பியோடியுள்ளனர்
சிறீலங்கா படைகளில் இருந்து 65,000 படையினர் தப்பிச் சென்றிருப்பதாகவும், இவர்களில் 2,000 பேர் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தப்பியோடிய படையினர் கைது செய்யப்படும்போது, அவர்கள் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டு ஒரு வருடம் வரையில் சிறையில் அடைக்கப்படுவதாக, நீதியமைச்சின் செயலர் சுகத கம்லத் தெரிவித்தார்.
தப்பியோடிய அனைவரும் கைது செய்யப்பட்டால், அவர்களை சிறையில் அடைக்க, இடப்பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கைது செய்யப்பட்ட படையினர் நாட்டிலுள்ள பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களை தனியாக அடைத்து வைக்க சிறையொன்று தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா படைகள், மற்றும் துணைப்படைக் குழுக்களுக்கு அஞ்சி தஞ்சமடைந்துள்ள 600 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள், இவ்வாறான இடப் பற்றாக்குறையுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், புதிய கட்டிடம் இதுவரை கட்டப்படவில்லை.
No comments:
Post a Comment