Tuesday, July 14, 2009

விடுதலைப்புலி கிழக்கு தளபதி வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர்!!!

விடுதலைப்புலி கிழக்கு தளபதி வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக கூறுகிறார் கருணா


விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் ராம். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இலங்கை ராணுவம் உச்சக்கட்ட போர் நடத்தியபோது ராம், இலங்கை தெற்கு பகுதியில் உள்ள அம்பாறைக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
 
அவருடன் விடுதலைப்புலிகளின் கிழக்கு பகுதி அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன், துணைத் தலைவர் நகுலன் மற்றும் சுமார் 500 விடுதலைப்புலிகள் தப்பிச் சென்றனர். இவர்களை சரண் அடையுமாறு இலங்கை ராணுவம் கேட்டுக் கொண்டது.
 
ஆனால் தளபதி ராம் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ராம், நகுலன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளை அம்பாறை காடுகளில் இலங்கை ராணுவம் தேடிவருகிறது.
 
இந்த நிலையில் ராம், தயா மோகன் உள்பட சுமார் 500 விடுதலைப்புலிகள் வெளி நாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டதாக, விடுதலைப்புலிகள் இயக்கம் வலு இழந்து போக காரணமானவர்களில் ஒருவரும், இலங்கை அரசிடம் அமைச்சர் பதவி பெற்று இருப்பவருமான கருணா என்ற முரளீதரன்  பி.பி.சியின் சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
 
அம்பாறை காட்டுப்பகுதியில் இருந்து தப்பிய ராம், தயாமோகன் இருவரும் தற்போது மலேசியாவில் இருப்பதாக கருணா தெரிவித்துள்ளார். தனது ஆதரவாளர்களில் 600 பேரை இலங்கை ராணுவம் மற்றும் போலீசில் சேர்த்து இருப்பதாகவும் அந்த பேட்டியில் கருணா குறிப்பிட்டார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails