Tuesday, July 7, 2009

பன்னா காட்டில் ஒரு புலி கூட இல்லை!

 பன்னா காட்டில் ஒரு புலி கூட இல்லை!
 
நமது நாட்டில் உள்ள புலிகள் அதிகம் வாழும் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களில் ஒன்றான பன்னா காட்டில் வாழ்ந்து வந்த புலிகளில் ஒன்று கூட இன்றில்லை என்று மத்திய பிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம் சாத்தார்பூர் மாவட்டத்திலுள்ள பன்னா காட்டுப் பகுதி 543 சதுர கி.மீ. பரப்புள்ளதாகும். இங்கு கடைசியாக 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 24 புலிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அங்கிருந்த புலிகள் அனைத்தும் வேட்டையாடப்பட்டுவிட்டதாக புலிகளை காக்க வேண்டும் என்று செயலாற்றிவரும் தன்னார்வ நிறுவனங்கள் தெரிவித்தன. மத்தியப் பிரதேச அரசு அதனை மறுத்து வந்தது.

பன்னாவில் இன்று புலிகள் ஏதுமில்லை என்ற செய்தி நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் தேச புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு குழுவை அனுப்பி பன்னா காட்டில் ஆய்வு செய்தது. அங்கு ஒரு புலி கூட இல்லை என்று கூறியது.

தேச புலிகள் பாதுகாப்பு ஆணையம் கூறியதை இன்று மத்தியப் பிரதேச மாநில சட்டப் பேரவையில் அம்மாநில வனத்துறை அமைச்சர் இராஜேந்திர சுக்லா உறுதி செய்தார்.

புலிகள் இனப் பெருக்கம் செய்ய தருவிக்கப்பட்ட இரண்டு புலிகளைத் தவிர அங்கு வேறு எந்தப் புலியும் இல்லை என்பது மாநில வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்விலும் உறுதியானதாகக் கூறினார். 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails