வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் கடலுக்கடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோகுலன் 24 என்ற புலிகளின் இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. முழுமையாக உள்ளூர் தயாரிப்பில் புலிகளினால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த நீர்மூழ்க்கிக் கப்பல் சுமார் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் உடையது என தெரிவிக்கப்படுகிறது. இறுதிச் சமர் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையில் இருந்து சுமார் 600 மீட்டர் கடற்பரப்பில், கடலுக்கடியில் இக்கப்பல் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக, தெரிவிக்கும் இராணுவத்தினர், அது இயங்கும் நிலையில் கார் பற்றரிகளுடன் இருந்ததாகவும் கூறுகின்றனர். இருப்பினும் புலிகள் ஏன் இதனை பாவிக்கவில்லை என்பது மிகுந்த சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. இறுதிநேரத்தில் இராணுவத்தினர் எவரும் கடல்வழியாக தரையிறக்கம் எதனையும் மேற்கொள்ளவில்லை. மாறாக முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 2 மைல் தொலைவில் டோராப்படகுகளில் கடலில் இராணுவம் நிலைகொண்டிருந்தபோதும், புலிகள் இதனை ஏன் பயன்படுத்தவில்லை என்பதுபோன்ற கேள்விகள் பலர்மனதில் எழுகின்றது. |
No comments:
Post a Comment