Wednesday, July 8, 2009

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு காலத்தின் உடனடி தேவை ‐ கோவிந்தன் வாசு:(கட்டுரைகளின் கருத்துக்களுக்கு கட்டுரையாசிரியர்களே பொறுப்பு:)

 

13 வது சட்ததின்  காவல்துறை அதிகாரங்கள் கிழக்கிற்கு  தேவை இல்லை என்று சொன்ன கரு நாக்குகளும் சமஸ்டி தான் ஒரு தீர்வு அனால் அதற்கு புலிகள் தான் தடையாக இருக்கிறார்கள் என்று சொல்லிவந்த ஆனந்தமான  சங்கர சித்தர்களும், மத்தியில கூட்டு ஆட்சி மாநிலத்தில சுயாட்சி  என்று சொல்லி கொண்டு இருந்து இப்ப  தமது கட்சி அடையாளத்தையே தக்கவைக்க முடியாமல் வேற்று இலைக்குள் நின்றால் தான் வடக்கில  வசந்தம் வீசும் என்று சொல்லிக்கொண்டு  வீணையை கைவிட்டவர்களும் ,  ஈழம், சுய நிர்ணய உரிமை என்று தேர்தலில நின்று 22  ஆசனங்களை பெற்று கொண்டு பாராளமன்றம் சென்ற தமிழ் கூட்டமைப்பும் தற்போது புலிகள் தோற்று விட்டார்கள்  இனி எங்களிடம் பலம் இல்லை இனியும்  சுயநிர்ணயம் தேசியம் பற்றி  பேசி பயனில்லை  என்று சொல்லிகொண்டு மகிந்தா புதிதாக ஆரம்பித்துள்ள  அனைத்து கட்சி மகாநாட்டில ஒன்றாக உட்காந்து விருந்தும் உண்ட பின்பும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு ஒரு தீர்வை மகிந்தாவின் சிந்தனைக்குள் நின்று சுயர் நிர்ணய உரிமையை  பெற்று தரும் என்று எப்படி நம்புவது?
அல்லது தமிழர்களின் உரிமைக்கான ஆயுத  போராட்டதிக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக வன்னியில் கோரமாக தடை செய்யபட்ட ஆயுதங்கள் மூலம்  கொலை செய்யப்பட்டதையா ? அல்லது வைத்தியசாலை மீது குண்டு வீசி காயபட்ட மக்களை கொலை செய்த போர் குற்றத்தையா ? அல்லது வெள்ளை கொடியுடன் சரணடைய வரச்சொல்லி வஞ்சகமாக உலக போர் விதிகளுக்கு முரணாக  செய்த போர்   குற்றத்தையா  ? அல்லது இந்த நாட்டில எல்லோர்க்கும் சம உரிமை என்று சொல்லிக்கொண்டு யுத்தம் முடிந்து 50  நாட்கள் கடந்தபின்பும்  3 இலட்ச மக்களை அடிப்படி வசதி கூட இன்றி முள்ளு கம்பிவேலி கொண்டு ஆடு மாடுகளை போல அடைத்து வைத்துக்கொண்டு சர்வதேச அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக செய்யும் குற்றத்தையா ?????
போர் முடிந்து 2 மாதங்கள் போனபின்பு கூட போர் குற்றமும் இனப்படுகொலையும் விசாரணை செய்ய வேண்டி உலக  மனித உரிமை அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து அமெரிக்க சனாதிபதியை வலியுறுத்திக்கொண்டு இருக்கிற நிலையில தமிழ் கூட்டமைப்பு இனவாத அரசுடன் சேர்ந்து  பழசை மறக்க தயார் என்று  சொல்வது தமிழர்களது பிணங்களின் மீது நின்று கொண்டு பிழைப்பு நடத்துவது போலுள்ளது
போருக்கு உதவி செய்த இந்தியாவையும் போர் குற்றகளை விசாரிக்க வேணும் என்று சொல்லி நிதி தராத மேலை நாடுகளையும் சந்தோஷபடுத்தி நிதியை பெற  கட்சிகளை கூட்டி  புனரமைப்பு மீள் குடியேற்றம் என்று சொல்லி நிதியை பெற்று போரினால் சிதைந்துள்ள ராணுவ கட்டமைபையும் தென் இலங்கை பொருளாதாரத்தை கட்டி  எழுப்ப திட்டமிட்டுள்ள நிலையில், ஒற்றை ஆட்சியின் கீழ் அதிகாரத்தை வழங்க முடியாதென்ற உண்மையை நன்கு தெரிந்த மகிந்தா அப்படி வழங்கினாலும் இனவாத கட்சிகள் மூலம் நீதிமன்றம் சென்று வடக்கு கிழக்கை பிரித்தது போல மீள பெறலாம் என்பதையும் அறிந்து கொண்டு  தமிழரையும் , உலகத்தையும்  ஏமாற்ற தீர்வை முன்வைக்க போவதாக நாடகமாட, அதற்கு தமிழ் கட்சிகளும் பழசை மறந்து ஒன்றாக ஒத்துழைப்போம் என்று சொல்லிப்போன பின்பும் இந்த தமிழ் கட்சிகள் எப்படி  சுய நிர்ணய உரிமையை பெற்று தரும் என்று காலத்தை கடத்துவது ???????
30 ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு தான் இனப்பிரசனைக்கு ஒரே ஒரு தீர்வு என்று வேறு எந்த தீர்வுக்கும்  உடன்படாமல் ஒரே கொள்கையில விலை போகாமல், நின்று போராடிய தலைவரை கொன்றுவிட்டதாகவும் ,அவரின் உடலை எரித்து நந்தி கடலில கரைத்து விட்டோம் என்றும்  அறிக்கைவிட்டு,   தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என்று  புலம்பெயர் தேசங்களில் வலியுறுத்துகிற மக்களின் போராட்டத்தையும் உணர்வுகளையும் மழுங்கடிக்க முயலுகிற நிலையில் தேசிய தலைவர் தொடர்பாக ஆரம்பத்தில ஒன்றுக்கு ஒன்று  முரணான அறிக்கை விட்ட புலிகளின் சர்வதேச தொடர்பகமும், புலனாய்வு துறையும் பின்பு மக்களின் குழப்பங்களை புரிந்து கொண்டும் , நாடு கடந்த அரசுக்கான திட்டத்தை முன் நகர்த்தி கொண்டு செல்லவும்  ஒரே  கருத்தான  அறிக்கை விட்ட பின்பும்  கூட தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை சொல்லி கொள்ளும் புலம்பெயர் நாடுகளில் மக்களால் அறியப்பட ஊடகங்கள் ஒரு நிலைபாட்டுக்கு வராமல் இன்னும் தலைவர் தொடர்பாக போட்டி போட்டு  முரண்பட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கொல்லபட்டது தேசிய தலைவர் தான்  வழமை போல தலைக்கு மை தடவி எந்தவித குழப்பமும் இன்றி போரிட்டு வீரமரணமடைந்தார் என்று  சில தமிழ் ஊடங்களும், இல்லையில்லை போர் முடிய சில நாட்களுக்கு முன்பு தலைவர் மீசை இல்லாமல் இருந்தார், அவருக்கு  எப்படி இப்படி  அடர்ந்த சில நாட்களுக்குள்  மீசை வளர முடியும் ?  என்று ஆராட்சி செய்து இன்று வரை மக்களை குழப்பும் இந்த தமிழ் ஊடகங்கள் இது வரை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றோ, அல்லது எப்படி இந்த தமிழ் ஈழ விடுதலை போரை அரசியல் ரீதியாக முன்கொண்டு செல்லலாம் என்றோ ஒரு  ஆய்வு  செய்து மக்களை வழி நடத்தாமல் சிங்களத்தின் சிந்தனைக்கு தம்மை அறியாமலே உதவி செய்வதை எப்படி பாராட்டுவது  ?.
3 இலட்சம் மக்கள் முள்ளுகம்பிகளின் பின் அடிப்படை வசதி இன்றியும் 10 ஆயிரத்துக்கு மேலான போராளிகள் சிறைகளில சித்திரவதைகுள்ள நிலையில இன்னும் சில தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை அடையாள படுத்தும் ஊடகங்களும் ஆய்வாளர்களும், தமிழ் நாட்டிலுள்ள தமிழ் உணர்வாளர்களும் விரைவில பிரபாகரன் தலைமையில அடுத்த கட்ட  போர் வெடிக்கும் என்று அறிக்கை விட்டு, ஆய்வுகளை எழுதுவதன் மூலம் இன்னும் தமிழர்களின் அரசியல் போராட்டம் பின்னுக்கு போகுமே அன்றி எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. இந்த ஊடகங்களும், ஆய்வுகளை எழுதுபவர்களும் மக்களை இன்னும் ஒரு மாயைக்குள்  வைத்திருக்காமல், நாடு கடந்த அரசை நிறுவுவதன் மூலம் எப்படி தமிழ் ஈழ கனவை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டியதே  இன்று உள்ள பணியாகும்.
இந்த நாடு கடந்த அரசை உருவாக்கும் தரப்பிற்கும் தமிழ் நாட்டிலுள்ள  தமிழ் உணர்வுள்ள தரப்பிற்கும்  இடையில் ஒரு இடை வெளி இருபது போல தெரிகிறது. முதலில் இந்த குழுவினர் தமிழ் நாட்டிலுள்ள தமிழ் ஈழம் தான் என்று ஒரே ஒரு தீர்வு என்று சொலி வரும் கட்சிகளையும், தனி ஈழம் அமைத்து தருவேன் என்று சொன்ன   ஜெயலலிதா  போன்றவர்களிடம்   இந்த நாடு கடந்த அரசு பற்றி விளக்கி ஆதரவை பெறுவதுடன் தமிழ் நாட்டு மக்களிடையே இது தொடர்பாக ஒரு எழுச்சியை உருகக்க வேண்டும்
உருவாகவுள்ள நாடு கடந்த அரசு (transnational government) ஏற்கனவே வேறு நாடுகளால் நிறுவப்பட்ட Government of Exile   இற்கும் சில வேறுபாடுகள் உள்ளதாக சொல்லும் செயற்குழுவினர் இந்த அரசை அமைக்க கட்டாயம் ஒரு நாட்டின் உடனடி அங்கிகாரம் தேவை இல்லை என்கின்றனர், உலக தமிழர்கள் ஒன்று பட்டு ஆதரவு தந்தாலே  போதும் என்கின்றனர் எனினும் புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ் மக்கள் ஒன்றாக சேர்ந்து வீதிகளில் நின்று போரை நிறுத்த போராடியபோது, இந்தியாவை மீறி போரை நிறுத்தமுடியாமல் நின்ற மேலை நாடுகள்  ஆககுறைந்தது போர் குற்றங்களை ஆவது  விசாரிக்க முயற்சி மேற்கொண்டு,  தோல்வி கண்ட பின், இனி இந்த புலம்பெயர் தேசத்தில போராடும் தமிழர்களுக்கு என்ன செய்யலாம் என்று எண்ணுகிற நிலையில, உடனடிக்கு இல்லாவிடினும் காலப்போக்கில், இந்த நாடு கடந்த தமிழர்களின் அரசை ஏற்று கொள்ள முன்வரும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே உரியவர்கள் ஒன்றுபட்டு முதலில மக்களுக்கு இந்த கொள்ளகை பற்றி தெளிவாக விளக்கி, உலக தமிழர்களை  ஒரு அரசியல் சக்தியில் கொண்டுவந்து   போராடுவதன் மூலம், தமிழர்களின் தனி நாட்டுக்கான கனவு முள்ளிவாய்க்காலில்  புதைந்துவிடவில்லை, என்றும் நந்தி கடலில கரைந்து விடவில்லை  என்பதை உலகுக்கும் இலங்கை அரசுக்கும் தெளிவாக எடுத்து உரைக்க முடியும், எனவே இந்த நாடு கடந்த அரசு ஒரு காலத்தின் தேவை என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து செயற்பட முன்வர வேண்டும்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails