| | பூமியில் முதன் முதலில் ஏற்பட்ட பெரிய பிரளயம் காரணமாக உயிரினங்கள் தோன்றியதாக கருதப்படுகிறது. அவை பரிணாம வளர்ச்சி அடைந்து நிலத்தில் வாழும் உயிரினங்களும், நீரில் வாழும் உயிரினங்களும் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது போன்ற செயற்கையான பிரளயத்தை ஏற்படுத்த ஐரோப்பிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
அதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைப்பகுதியில், 300 அடி ஆழத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நீள்வட்ட வடிவில் உள்ள அந்த நிலையத்தில் 85 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரம் அணு விஞ்ஞானிகள் (இயற்பியலாளர்கள்) பணியாற்றி வருகின்றனர். ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு முனைக்கும், அடுத்த முனைக்கும் இடையிலான தூரம் மட்டும் 27 கி.மீ. கடந்த 1994-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சி திட்டத்தின் மொத்த செலவுத்தொகை ரூ.36 ஆயிரம் கோடி (8 பில்லியன் டாலர்). பெரிய தூண் போன்ற அளவில் உள்ள இரண்டு அணுக்களை மணிக்கு ஆயிரத்து 600 கி.மீ. வேகத்தில் மோதச்செய்து ஆராய்ச்சி நிலையத்துக்குள் பிரளயம் ஏற்படுத்துவதே இந்த ஆராய்ச்சியின் முக்கியப்பணி. இதன் மூலம் ஏராளமான அணுக்கள் தோன்றி பரிணாம வளர்ச்சியின் முதல் கட்டம் உருவாகும். அதன் தொடர்ச்சியாக பெரிய உயிரினங்கள் எப்படி தோன்றுகின்றன என்று ஆராய்வதே இதன் நோக்கம். அதாவது, பூமிக்கு அடியில் மிகப்பெரிய அளவிலான அணுகுண்டு சோதனை நடத்தப்பட இருக்கிறது. அணுக்களை மோதச்செய்யும் சோதனைக்கு விஞ்ஞானிகள் குறித்திருக்கும் நாள், இன்று (செப்டம்பர் 10). இந்த சோதனையால் நிலத்துக்கு மேலேயும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சோதனையின் விளைவாக உலகமே அழிந்து விடும் என்றும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். எனவே, ரூ.36 ஆயிரம் கோடியை செலவு செய்து "ரிஸ்க்"கான ஆராய்ச்சி செய்வதை கைவிடுங்கள்' என்று எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் விஞ்ஞானிகள் மறுத்து விட்டனர். இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "செப்டம்பர் 10, புதன்கிழமை (இன்று) அன்று பூமிக்கு கீழே அணு சோதனை நடத்துவதால், பேரழிவு ஏற்படாது. இதன் விளைவாக உலகம் அழிந்து விடும் என்ற கருத்தை யாரும் நம்ப தேவையில்லை. ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதை, 2003-ம் ஆண்டிலேயே விஞ்ஞானிகள் குழு உறுதி செய்துள்ளது. சுருக்கமாக கூறினால், இந்த ஆராய்ச்சியால் மனித குலத்துக்கு ஏராளமான பயன்களே ஏற்படும். புற்று நோய் போன்ற சில முக்கிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கலாம். வேறு சில கதிரியக்க பயன்களையும் பெற முடியும்'' என்கின்றனர். | |
No comments:
Post a Comment