Sunday, September 28, 2008

சர்ச் மீதான தாக்குதல் கண்டித்து தாராபுரத்தில் கிறிஸ்தவர்கள் பேரணி, உண்ணாவிரதம்

சர்ச் மீதான தாக்குதல் கண்டித்து தாராபுரத்தில்
கிறிஸ்தவர்கள் பேரணி, உண்ணாவிரதம்


தாராபுரம், செப். 28-


சர்ச் மீதான தாக்குதல் கண்டித்து தாராபுரத்தில் இன்று கண்டன பேரணி மற்றும் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.


ஒரிசா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலும், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் சர்ச் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டித்து தாராபுரத்தில் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் 28ம் தேதி பேரணி மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் கடந்த 25ம் தேதி தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகேயுள்ள புனித அலோசியஸ் சர்ச் வளாகத்தில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ள குழந்தைஏசுவின் சிலை கல்வீசி உடைக்கப் பட்டது.


சர்ச் மீதான தொடர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தாராபுரத்தில் இன்று கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் பேரணி நடந்தது. பேரணிக்கு புனித அலோசியஸ் சர்ச் பங்குதந்தை லூயிஸ்அடிகளார் தலைமை தாங்கினார்.
பேரணி, தென்னிந்திய திருச்சபை ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு வசந்தா ரோடு ரோடு, என்.என்.பேட்டை வீதி, அனுப்பர் தெரு, தாலுகா ஆபீஸ் ரோடு, சர்ச் ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் சென்றடைந்தது.
அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையினர், தென்னிந்திய திருச்சபை யினர், பெந்தே கோஸ்தே சபையினர் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இப்போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.
 
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails