| |
அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலா கேட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகை உள்பட 2 வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகைகளுக்கு ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த செய்திகளுக்காக மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்போவதாக அவர் எச்சரித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது வக்கீல் நவநீத கிருஷ்ணன் மூலமாக, வாரம் இருமுறை வெளியாகும் ஜூனியர் விகடன்,குமுதம் பத்திரிகைகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த பத்திரிகையில், "கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான்; போடுங்கள் கையெழுத்து' என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியானதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களை கொண்டு வெளியிடப்பட்டதாகவும், தனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவு படியே அந்த செய்தி வெளியிடப்பட்டதாகவும் ஜெயலலிதா கருதுகிறார் என்றும் இந்த பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும் என்றும் வக்கீல் நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக்கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும், பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மற்றொரு வாரம் இருமுறை வெளியாகும் ஏட்டில் பிரசுரமான "எம்ஜிஆர் மறைவுக்கு பின் திமுகவில் சேர முயன்றார் ஜெயலலிதா'தூது சென்றவர்கள் பகீர் வாக்குமூலம் என்று செய்தி வெளிவந்ததாகவும், இதற்கும் அந்த பத்திரிகை மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.10 கோடி கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த தகவல் அப்பட்டமான பொய் என்றும் இதுபோன்ற நிலைமை ஜெயலலிதாவுக்கு ஏற்படவில்லை என்றும் வக்கீல் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
http://www.adhikaalai.com/index.php?/en/?????????/???????/-??????,???????-?????????-???????????-:-??.???????-????????
No comments:
Post a Comment