வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா, தொடரை கைப்பற்றியது. நேற்று முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. சூப்பர் பீல்டிங்: ஆஸ்திரேலிய துவக்க வீரர்கள் மார்ஷ்(30), வாட்சன்(27) சிறப்பான துவக்கம் தந்தனர். கேப்டன் மைக்கேல் கிளார்க்(25), டேவிட் ஹசி(11) சோபிக்க தவறினர். ஹடின்(16) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். வங்கதேச வீரர்கள் துடிப்பாக பீல்டிங் செய்ய, ஆஸ்திரேலிய அணியால் ரன் குவிக்க முடியவில்லை. மைக்கேல் ஹசி(57) ரன்களுடனும், ஒயிட் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்க, ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் மட்டும் எடுத்தது. விக்கெட் மடமட: சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் அரைசதம் கடந்து (63) நம்பிக்கை அளித்தார்.ஆனாலும் மற்றவர்கள் ஆஸ்திரேலிய வேகங்களிடம் சரண் அடைந்து ஏமாற்றினர். சித்திக்(0), கேப்டன் அஷ்ரபுல்(3), அலோக் கபாலி(0), ஹசன்(27), அப்துர்ரசாக்(14) விரைவாக அவுட்டாயினர். வங்கதேச அணி 29.5 ஓவரில் 125 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் அசத்திய ஆஸ்திரேலியா "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. |
Monday, September 8, 2008
ஆஸி., "ஹாட்ரிக்" வெற்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment