Friday, September 26, 2008

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு:ஒபாமாவுக்கு அதிக ஆதரவு

 
lankasri.comஅமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கேனும் போட்டியிடுகிறார்கள். இரு வரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒபாமாவுக்கு முன்னாள் அதிபர் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி ஆகியோரும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அங்குள்ள ஒரு நிறுவனம் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பற்றி ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. தில் ஒபாமாவுக்கே அதிக செல்வாக்கும் வெற்றி வாய்ப்பும் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஒபமாவுக்கு 51 சதவீத ஓட்டுக்களும் ஜான் மெக்கேனுக்கு 46 சதவீத ஓட்டுக்களும் கிடைத்தன.

அமெரிக்காவில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, வர்த்தக சரிவு ஆகியவற்றுக்கு குடியரசு கட்சியினரின் அணுகு முறை மற்றும் திட்டங்களே காரணம் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

பொருளாதார வீழ்ச்சியை சரி கட்டும் முயற்சியில் ஜான்மெக்கேனை விட ஒபாமாதான் அதிக ஆர்வம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளன.

ஜான்மெக்கேன் அதிபராக வந்தால் இப்போது ஜார்ஜ்புஷ் கடை பிடிக்கும் அதே வழிகளைத்தான் அவரும் கடை பிடிப்பார் என்றும் பெரும்பான்மையான மக்கள் கருதுகிறார்கள்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1222185972&archive=&start_from=&ucat=1&

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails