| |
| |
வன்னேரிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 85க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 280க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பை ஆதாரங்காட்டி 'தமிழ்நெற்'செய்திவெளியிட்டுள்ளது. கொழும்பு பொரளையில் ஜயரடனம் மலர் சாலையிலும் இன்னுமொரு மலர்சாலையிலும் 56 படையினரின் சடலங்கள் அஞ்சலிக்கா வைக்கப்பட்டு நல்லக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த இணைத்தளம் இதன் பின்னர் 29 சடலங்கள் விடுதலைப்புலிகளினால் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஊடாக வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் முறிடிப்பு தாக்குதலையடுத்து படுகாயமடைந்த நிலையில் தென்னிலங்கையில் உள்ள இராணுவ வைத்தியசாலைகள் நிரம்பிய நிலையில் உள்ளதாகவும் படை வட்டாரங்களை ஆதாரங்காட்டி தமிழ் நெற் செய்திவெளியிட்டுள்ளது. இந்த மோதலில் படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பதுங்குகுழிகளை அழிப்பதற்கு பயன்படுத்திய தாங்கியெதிர்ப்பு துப்பாக்கிகள் கைகொடுக்காத நிலையில் அவை தமிழீழ விடுதலைப்புலிகளின் கைகளில் சிக்கியது குறித்து கடும் அதிர்ப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment