|
கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள ஒரிஸ்ஸா மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள கிறிஸ்துவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். ஒரிஸ்ஸா மாநிலத்தில் காந்தமால் மாரட்டத்தில் அண்மையில் நடந்த மதக்களவரத்தின் போது கிறிஸ்துவர்களின் ஆலயங்கள், வீடுகள் ஆகியவை தீவைத்து கொளுத்தப்பட்டன. கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது குறித்து வட அமெரிக்க இந்திய கிறிஸ்துவர்கள் கழக சம்மேளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கிறிஸ்வ மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் உள்ளூர் போலீஸ் துணை ராணுவ படையினர் ஆகியோரை இடமாற்றம் செய்துவிட்டு அங்கு ராணுவத்தை குவிக்க வேண்டும். இந்த சம்பங்கள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்து அடிப்படைவாதவாதிகளிடம் இருந்து கிறிஸ்துவ மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அந்த சம்மேளனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்டடுள்ளது. ஒரிஸ்ஸாவில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஒரிஸ்ஸா கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனது சொந்த மக்களையே ஒரிஸ்ஸா அரசு காக்க தவறி விட்டது,. அரசு அறிக்கை விடுத்த அதே நாளில் மேலும் 6 சர்ச்சுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவர்களின் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. காந்தமால் பகுதியில் 60 ஆயிரம் கிறிஸ்துவர்கள் அஞ்சி நடுங்கி காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு உண்ண உணவில்லை. குடிக்க ஞிரில்லை. கலவரத்தில்காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது என்றும் இத்தனைக்கும் காரணமான ஒரிஸ்ஸா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment