Wednesday, September 24, 2008

பாக். ஓட்டல் மீது கார் குண்டு தாக்குதல்; இமாம் உள்பட 3 பேர் கைது

இஸ்லாமாபாத், செப். 23-

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் உள்ள `மாரியட்' 5 நட்சத்திர ஓட்டலில் கடந்த சனிக்கிழமை கார் குண்டு தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய இந்த கார் குண்டு தாக்குதலில் வெளிநாட்டு தூதர்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள், அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 68க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி உள்பட முக் கிய தலைவர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றது. ஆனால் அவர் கள் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தி யது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிர வாதி கள் என்று போலீசார் தெரி வித்து இருந்தனர்.

இந்த நிலையில் கார் குண்டு தாக்குதல் தொடர் பாக ஜாமியா மசூதி இமாம் குவாரி முகமது அலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஹர்கத் அல் ஜிகாத் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த அமைப்புக்கு அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கார் குண்டு தாக்குதல் நடத்திய தற்கொலைப் படை தீவிரவாதி அடையாளமும் தெரிய வந்துள்ளது. ஓட்டல் முன் அமைக்கப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் அந்த தீவிரவா தியின் படம் பதிவாகி உள்ளது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails