Thursday, September 18, 2008

"சகோதரரின் திடீர் மரணத்தால் தீவிரவாதியாக மாறினார் பின்லேடன்"

lankasri.comவிமான விபத்தில் தனது சகோதரரை பறி கொடுத்த ஒசாமா பின்லேடன், அந்த மனஅழுத்தத்தால் தீவிரவாதப் பாதையை தேர்ந்தெடுத்து விட்டதாக அவருடைய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆர்தர் ரைடிங் (59) தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வரரான ஒசாமா பின்லேடன் 1970-களில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருடைய குடும்பத்தின் பாதுகாப்பு, லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்த நிறுவனத்தின் சார்பில் பின்லேடனின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய ஆர்தர் ரைடிங், பல்வேறு பரபரப்பு தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர் பின்லேடன். அவரது வீடு யாரும் கற்பனை செய்து பார்த்திராத வகையில் மிகப் பிரமாண்டமாக அமைந்திருக்கும். அந்த வீட்டுக்குள்ளேயே குண்டு துளைக்காத பல அறைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அந்த அறைக்குள் என்ன இருக்கும் என்று ஒருபோதும் பார்த்ததில்லை என ரைடிங் கூறியுள்ளார்.

ஆடம்பர பிரியராக வாழ்ந்த பின்லேடனின் சகோதரர் சலீம் என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். சகோதரரின் மரணம் பின்லேடனை நிலைகுலையச் செய்தது. பின்நாளில் அவர் தீவிரவாதப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு சகோதரரின் மரணம் முக்கிய காரணமாக அமைந்து விட்டதாக ரைடிங் மேலும் கூறியுள்ளார்.

பின்லேடனுடன் மிகவும் நெருங்கி பழகிய அவர் மீண்டும் அவரை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1221549936&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails