| |
பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் சென்னையில் நேற்றிரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு (வயது 73). கடந்த ஒருவாரமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று இரவு 8.45 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு குன்னக்குடி வைத்தியநாதன் மரணம் அடைந்தார் கர்நாடக இசையில் வயலினுக்கு இருந்த முக்கியத்துவத்தை தன்னுடைய அபாரமான பயிற்சி, திறமையால் பாமர மக்களும் உணரச் செய்தார். வயலினில் அவர் செய்த சாகசங்கள் பண்டிதர்களாலும் பாமரர்களாலும் ஒருங்கே பாராட்டு பெற்றன. 12 வயதிலேயே வயலின் வாசிப்பில் தனிச்சிறப்பைப் பெற்ற வைத்தியநாதன் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம் போன்ற மேதைகளுக்கு வாசித்திருக்கிறார். திரையுலகிலும் இசையமைப்பாளராகக் கொடிகட்டிப் பறந்த வைத்தியநாதன் தனது கச்சேரிகளில் வயலினைப் ""பேச வைத்து'' மக்களிடம் கரகோஷம் பெற்றவர். பல திரைப்படங்களுக்கும் இசை அமைத்து சாதனை படைத்திருக்கிறார். பத்மஸ்ரீ, சங்கீத மாமணி ஆகிய விருதுகளைப் பெற்றவர். இறுதிச்சடங்கு அவரது உடல் நேற்று நள்ளிரவு சென்னை மந்தவெளி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச்சடங்கு நாளை (புதன்கிழமை) மாலை நடக்கிறது. |
http://www.adhikaalai.com/index.php?/en/?????????/???????/???????????-????????????-?????
No comments:
Post a Comment