Tuesday, September 23, 2008

ஒரிஸ்ஸா வெள்ளம் : மீட்புப் பணிகளில் கடும் பாதிப்பு

ஒரிஸ்ஸா வெள்ளம் : மீட்புப் பணிகளில் கடும் பாதிப்பு
ஒரிஸ்ஸா மாநிலத்தில் மகாநதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ள அளவு சற்றே குறைந்தபோதிலும், ஆட்கள் மற்றும் படகுகளின் பற்றாக்குறை காரணமாக மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக, மகாநதியின் 61 கிளை நதிகளிலும் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், மற்ற ஆறுகளில் வெள்ள அளவு சற்று குறைந்துள்ளன.

கட்டாக், கேந்த்ரபாரா, ஜோகத் சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், மீட்புப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் போதிய எண்ணிக்கையில் படகுகள் இல்லாத காரணத்தால், தொடர்ந்து மீட்புப் பணிகள் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails