Wednesday, September 10, 2008

தீவிரவாதத் தாக்குதல் அச்சத்தில் அமெரிக்கா!

lankasri.comஅமெரிக்காவில் 2001-ம் ஆண்டு உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட அச்சம் அந்நாட்டு மக்கள் மத்தியில் இன்னும் அகலவில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அணுகுண்டுகள் மற்றும் உயிரி ரசாயன ஆயுதங்கள் மூலம் தீவிரவாதிகளால் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படாலும் என்ற அச்சத்தில் அமெரிக்க மக்கள் மூழ்கி யிருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

புஷ் நிர்வாகம் தவறிவிட்டது: நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் அதிபர் புஷ் தலைமையிலான நிர்வாகம் தவறவிட்டதே இதுபோன்ற நிலைக்குக் காரணம் என்றும் அந்த அறிக்கையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மோசமான சூழ்நிலைக்கே வழிவகுக்கும் என்று அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லீ ஹேமில்டன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்கு ஹேமில்டன்தான் தலைமை வகித்தார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1221059524&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails